தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மயிலாடுதுறையில் சோகம்: கவனிக்க ஆள் இல்லாததால் விபரீத முடிவெடுத்த தம்பதி! - ELDER COUPLE SUICIDE ATTEMPT

Elder couple suicide attempt: மயிலாடுதுறை அருகே கவனிக்க ஆள் இல்லாததால் வயதான தம்பதி தற்கொலை முயற்சி செய்த நிலையில், சிலிண்டரை திறந்து விட்டு வெடிக்க வைத்ததில் படுகாயம் அடைந்த மனைவி பலியானார்.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamilnadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 30, 2025, 7:23 PM IST

நாகப்பட்டினம்: மயிலாடுதுறை அருகே நீடூர் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் இளங்கோவன் (69) ஹோமியோபதி மருத்துவராக உள்ளார். மேலும் மயிலாடுதுறை திராவிடர் கழக ஒன்றிய தலைவராக உள்ளார். இவருக்கு செந்தாமரை (59) என்ற மனைவியும், 2 மகள்களும், 1 மகனும் உள்ளனர். இளங்கோவனுக்கு 15 ஆண்டுகளுக்கு முன்பு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில், மனைவி செந்தாமரை சிறுநீரக கோளாறால் படுத்த படுக்கையாக இருந்துள்ளார்.

மகள்கள் மற்றும் மகனுக்கு திருமணம் ஆகி மகள்கள் வெளியூரிலும் மகன் இனியவன் வீட்டின் மேல் பகுதியிலும் வசித்து வருகின்றனர். வயதான தம்பதியான இளங்கோவன் செந்தாமரையை கவனிப்பதற்கு ஆட்கள் இல்லை என்பதால் மனமடைந்து இருந்த நிலையில், தற்கொலை முடிவுக்கு வந்ததாக கூறப்படுகிறது. இன்று காலை கேஸ் சிலிண்டரை திறந்த விட்டு இளங்கோவன் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

தற்கொலை தவிர்ப்பு விழிப்புணர்வு (Credits - ETV Bharat Tamilnadu)

அப்போது கேஸ் சிலிண்டர் வெடித்து தீ பரவியதில் வீட்டின் ஒரு பகுதி சேதமடைந்து தரைமட்டமானது. இளங்கோவன் செந்தாமரை இருவரும் படுகாயம் அடைந்தனர். சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து, இருவரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் ஆனால் வழியிலேயே செந்தாமரை பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையும் படிங்க:மகாத்மா காந்திக்கு காந்தி மண்டபத்தில் ஏன் மரியாதை செலுத்தவில்லை? முதலமைச்சருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி கேள்வி - GOVERNOR QUESTIONS THE CM

இளங்கோவன் சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக நீதிபதி கலைவாணி, படுகாயம் அடைந்த இளங்கோவனிடம் நேரில் விசாரணை மேற்கொண்ட போது, கவனிக்க ஆள் இல்லாததால் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக அவர் தெரிவித்தார். கவனிக்க ஆள் இல்லாததால் அவர்கள் எடுத்த விபரீத முடிவு அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்த மயிலாடுதுறை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்கொலை எதற்கும் தீர்வல்ல: சொந்தக் காரணங்களாலோ அல்லது மன அழுத்தத்தின் காரணமாகவோ தற்கொலை எண்ணம் தோன்றினால் 104 அல்லது சிநேகா உதவி எண்களை அழையுங்கள். சிநேகா தற்கொலைத் தடுப்பு உதவி எண் - 044-24640050, மாநிலத் தற்கொலைத் தடுப்பு உதவி எண் - 104, இணைய வழித் தொடர்புக்கு - 022-25521111, மின்னஞ்சல் help@snehaindia.org அல்லது நேரில் தொடர்புகொள்ள, சிநேகா பவுண்டேஷன் ட்ரஸ்ட், 11, பூங்கா சாலை (பார்க் வியூ ரோடு), ஆர்.ஏ.புரம், சென்னை - 600028.

ABOUT THE AUTHOR

...view details