தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னையில் 10 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை.. காரணம் என்ன? - ED raid at ITL office branch

Chennai ED Raid: சென்னை எழும்பூரில் உள்ள ஐடிஎல் நிறுவனத்தின் கிளை அலுவலகம் மற்றும் அதனுடன் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னையில் அமலாக்கத்துறை சோதனை
சென்னையில் அமலாக்கத்துறை சோதனை

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 23, 2024, 12:07 PM IST

சென்னை:மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு இன்டர்நேஷனல் டிரேட் லிமிட் என்கிற தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அதன் கிளை நிறுவனங்கள் சென்னை, திருச்சி, டெல்லி, விசாகப்பட்டினம் உள்ளிட்ட இடங்களில் செயல்பட்டு வருகின்றன. மேலும் நேபாளம், பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் அரபு நாடுகளுடன் வர்த்தகம் செய்து வரும் இந்த நிறுவனம், டைட்டில் கம்யூனிகேஷன் என்ற விளம்பர நிறுவனத்தையும் நடத்தி வருகிறது.

இந்த நிறுவனம் நிதி முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக அமலாக்கத்துறைக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், இன்று (பிப்.23) காலை முதல் இந்த நிறுவனத்திற்குத் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

8 வாகனங்களில் சென்றுள்ள அமலாக்கத்துறை அதிகாரிகள், சென்னை எழும்பூரில் உள்ள ஐடிஎல் நிறுவனத்தின் கிளை அலுவலகம் மற்றும் அதனுடன் தொடர்புடைய 10-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்துகின்றனர். இந்த சோதனை முடிந்த பின்னரே, மற்ற விவரங்கள் தெரிய வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க:கும்பகோணத்தில் காருக்குள் இருந்த ரூ.17 லட்சம் திருட்டு.. குற்றப்பிரிவு போலீசார் விசாரணை

ABOUT THE AUTHOR

...view details