தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ரூ.12 லட்சம் வரை வருமான வரி இல்லை… பொருளாதார வல்லுநர்கள் கூறுவது என்ன? - ECONOMISTS REACTION ON BUDGET

Economists reaction on budget: மத்திய பட்ஜெட்டில் 12 லட்சம் வரை ஆண்டு வருமானம் பெறுவோர் வருமான மரி செலுத்த தேவையில்லை என்ற அறிவிப்பு குறித்து பொருளாதார வல்லுநர்கள் கூறும் கருத்துகளை பார்க்கலாம்

தனிநபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பு
தனிநபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பு (Credits - ETV Bharat Tamilnadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 1, 2025, 5:38 PM IST

சென்னை: 2025-2026ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் அதிகபட்சமாக பாதுகாப்பு துறைக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்புத் துறைக்கு ரூ.4.91 லட்சம் கோடியும், உள்துறைக்கு ரூ.2.33 லட்சம் கோடியும், ஊரக வளர்ச்சி துறைக்கு ரூ.2.66 லட்சம் கோடியும், வேளாண் துறைக்கு ரூ.1.71 லட்சம் கோடியும், கல்விக்கு ரூ. 98,311 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக தனிநபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பு கடந்த ஆண்டு ரூ.7 லட்சம் ரூபாயாக இருந்தது. ஆனால் இந்த ஆண்டு ரூ.12 லட்சம் ரூபாயாக உயர்த்தி நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். அதில், ரூ.4 லட்சம் வரை ஆண்டு வருமானம் பெறுவோருக்கு வரி இல்லை, ரூ.4 லட்சம் முதல் 8 லட்சம் வரை 5% வரி, ரூ. 8 லட்சம் முதல் 12 லட்சம் - 10% வரி, ரூ.12 லட்சம் முதல் 16 லட்சம் வரை 15% வரி , ரூ.16 லட்சம் முதல் 20 லட்சம் வரை 20% வரி, ரூ.20 லட்சம் முதல் 24 லட்சம் வரை 25% வரி, ரூ.24 லட்சத்திற்கு மேல் 30% வரி விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தனி நபர் வருமான வரி விலக்கு உச்சவரம்பு உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டது தொடர்பாக ஈடிவி பாரத் செய்தியாளரிடம் பேசிய தென்னிந்திய தொழில் வர்த்தக சபை வரித்துறை தலைவர் சுரேஷ், ”இந்த பட்ஜெட் அனைத்து தரப்பினருக்கும் பலன் கிடைக்கும் வகையில் இருந்தது. குறிப்பாக ரூ.12 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் வரை வருமானம் பெறுபவர்களுக்கு வரி இல்லை என்பது மிகப் பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது. மத்திய அரசு இதை பெரிய முன்னெடுப்பாக எடுத்துள்ளார்கள்.

ரூ.4 லட்சத்திற்கு மேல் வருமானம் இருந்தால், வருமான வரி ரிட்டன் (Nil return) தாக்கல் செய்ய வேண்டும். 12 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய்க்கு மேல் இருந்தால் மட்டுமே நம் வரி செலுத்த வேண்டும். வருமான வரித் துறையின் படிநிலை என்பதால் ரூ.4 லட்சத்தில் இருந்து 12 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் வரை இருந்தால் வருமான வரி ரிட்டன் செலுத்த வேண்டும். அவர்கள் வரி செலுத்த வேண்டிய அவசியம் இருக்காது. குறிப்பாக 87A சட்டப்பரிவு படி ரூ.12 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் வரை வருமானம் பெற்றிருந்தால் அதற்கு சட்ட விதிப்படி வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும். ஆனால் வருமான வரி பிடித்தம் செய்யப்படாது, தள்ளுபடி செய்யப்படும்” என தெரிவித்தார்.

இதையும் படிங்க: புதிய வருமான வரி நடைமுறையில் கணக்கை தாக்கல் செய்வோருக்கு ரூ.12 லட்சம் வரை இனி No Tax! ரூ.75,000 நிலைக்கழிவும் அறிவிப்பு! - UNION BUDGET 2025 FOR TAX

பொருளாதார வல்லுநர் பேராசிரியர் ஜோதி சிவஞானம் பேசுகையில், “வரவேற்கக் கூடிய பட்ஜெட் அறிவிப்பு என்றாலும் ரூ.7 லட்சம் ரூபாய்க்கு மேல் சம்பளம் பெறுபவர்களுக்கு மட்டுமே பயனளிக்க கூடிய வகையில் இந்த அறிவிப்பு உள்ளது. இந்த ஆண்டு வருவாய் செலவை மத்திய அரசு உயர்த்தி உள்ளது. இது மேலும் நிதி நெருக்கடியை ஏற்படுத்தும். இந்த ஆண்டு வருவாய் பற்றாக்குறையை 4.9 சதவீதத்திலிருந்து 4.8 சதவீதமாக அரசு குறைத்துள்ளது நல்லது என்றாலும் வருவாய் செலவை உயர்த்தி பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது மேலும் சுமையை ஏற்படுத்தும்” என கூறியுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details