கள்ளக்குறிச்சி:கள்ளக்குறிச்சி முன்னாள் எம்எல்ஏ பிரபுவின் தந்தை ஐயப்பா தியாகதுருகம் ஒன்றிய துணை சேர்மனாக இருந்த போது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக பிரபுவின் தந்தை ஐயப்பா அவருடைய மனைவி தைலம்மாள் ஆகியோர் மீது கள்ளக்குறிச்சி லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்தது. இதனைத் தொடர்ந்து இன்று (மார்ச் 1) ஐயப்பா தியாகதுருகத்திற்கு தொடர்புடைய எட்டு இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
பிரபுவின் மைத்துனர் வழக்கறிஞர் சுபாஷ் வீட்டிலும் ஐந்து பேர்கொண்ட லஞ்ச ஒழிப்புத் துறை குழுவினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், விழுப்புரத்தில் உள்ள பிரபுவின் மைத்துனர் வழக்கறிஞர் சுபாஷ் வீட்டிலும் ஐந்து பேர்கொண்ட லஞ்ச ஒழிப்புத் துறை குழுவினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த வழக்கில் கள்ளக்குறிச்சி முன்னாள் எம்எல்ஏ பிரபு தொடர்புடைய 9 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சோதனை முடிந்த பின்னரே, இந்த புகார் தொடர்பான முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதா என்பது உள்ளிட்ட தகவல்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரபு கடந்த 2011-16 வரை கள்ளக்குறிச்சி அதிமுக சட்டமன்ற உறுப்பினராக இருந்தது குறிப்பிடத்தக்கது.