சென்னை: நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல், நாடு முழுவதும் 7 கட்டங்களாக ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெற உள்ள நிலையில், டெல்லியில் உள்ள பாஜகவின் தலைமையகத்தில் அக்கட்சியின் தேர்தல் அறிக்கையைப் பிரதமர் மோடி இன்று (ஏப்.14) வெளியிட்டார்.
இந்நிலையில்,சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக செய்தி தொடர்பு தலைவர் டி கே எஸ் இளங்கோவன் பாஜக தேர்தல் அறிக்கை தொடர்பாகச் செய்தியாளர்களைச் சந்தித்தார் அப்போது பேசிய அவர், கடந்த 10 ஆண்டுகளில் பிரதமர் மோடி வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை எனவும் பாஜக வாக்குறுதிகள் என்பது, சொல்வது நிறைவேற்றாமல் இருப்பது தான் அவர்களின் சாதனை என்றார்.
மேலும், பாஜக தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது எனவும் தமிழ்நாட்டை பாஜக இதுவரை ஏற்றுக்கொள்ளவில்லை என குற்றம் சாட்டியுள்ளார். மேலும், தமிழ்நாடு மக்களின் உணர்வுகளுக்கு எதிரான ஆட்சி நடைபெற்று வருகிறது. வேற்றுமையில் ஒற்றுமை தான் இந்தியாவின் பெருமை என்பதைச் சிதைக்கும் முயற்சிகளில் பாஜக தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக விமர்சித்துள்ளார்.
பாஜக தேர்தல் அறிக்கையில் தமிழ் மொழியைப் பாதுகாக்கப்படும் என்று தெரிவித்துள்ளது குறித்த கேள்விக்கு, முதலில் தமிழ் மொழியைப் பாதுகாக்க இங்கு நடவடிக்கை எடுக்கவில்லை, முதலில் அதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார். 130 கோடி மக்களை 15 லட்சம் வங்கிக் கணக்கில் செலுத்தி லட்சாதிபதியாக்கப் போகிறேன் என்று சொன்னார்கள் அதைச் செய்யவில்லை, தற்போது 130 கோடியிலிருந்து 3 கோடியாக அதைக் குறைந்து விட்டார்களா என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், தேர்தலில் ஓட்டு வாங்கத் தான் வாக்குறுதிகளைச் சொல்கிறார்கள், அதை அவர்களின் கொள்கையாக யாரும் எடுத்துக் கொள்ளக் கூடாது.அதேபோல ராம திருவிழாக்கள் அவர்கள் நடத்தட்டும் அது அவர்களின் விருப்பம், ராமருக்கு மட்டும் செய்வதாகச் சொல்வார்கள், சிவனுக்குச் செய்வதில்லை அதைத் தமிழக மக்கள் கேள்வி கேட்க மாட்டார்களா என கேள்வி எழுப்பி உள்ளார்.
தொடர்ந்து பேசியவர், தமிழக மக்கள் பாஜக தேர்தல் அறிக்கை புரிந்து கொள்ள வேண்டும், தமிழுக்கு இங்கே அவர்கள் பணம் கொடுக்கவில்லை ஆனால் தமிழ் மொழியைப் பாதுகாக்க அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தேர்தலில் ஓட்டு வாங்கச் சொல்வதெல்லாம் அவர்களின் கொள்கைகள் யாரும் எடுத்துக் கொள்ளக் கூடாது என கூறினார். மேலும், இந்திய அரசியலமைப்பு சட்டத்தைத் திருத்தப் பார்க்கிறார்கள் என கடுமையாகச் சாடியுள்ளார்.
இதையும் படிங்க: ஒரே நாடு ஒரே தேர்தல்.. பாஜக தேர்தல் அறிக்கை வெளியீடு.. முக்கிய வாக்குறுதிகள் என்னென்ன? - BJP Manifesto 2024