தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தூத்துக்குடி மக்ரூன் தயாரிக்கும் இடங்களில் வாக்கு சேகரித்த கனிமொழி! - Kanimozhi at VOC market - KANIMOZHI AT VOC MARKET

Kanimozhi at VOC market: தூத்துக்குடி வஉசி மார்க்கெட்டில் வியாபாரிகளிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட திமுக வேட்பாளர் கனிமொழி, தொடர்ந்து தூத்துக்குடியின் புகழ் பெற்ற மக்ரூன் தயாரிக்கும் பகுதிக்குச் சென்று அங்குள்ள தொழிலாளர்களிடமும் வாக்கு சேகரித்தார்.

தூத்துக்குடி வஉசி மார்க்கெட்டில் உள்ள வியாபாரிகளிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட திமுக வேட்பாளர் கனிமொழி
தூத்துக்குடி வஉசி மார்க்கெட்டில் உள்ள வியாபாரிகளிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட திமுக வேட்பாளர் கனிமொழி

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 31, 2024, 8:21 PM IST

தூத்துக்குடி:தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில், திமுக சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி போட்டியிடுகிறார். அவர் இன்று (மார்ச் 31) அமைச்சர் கீதா ஜீவனுடன் சேர்ந்து, தூத்துக்குடி வஉசி சந்தையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். வஉசி சந்தையில் அமைந்துள்ள காய்கறிக் கடைகள், மீன் வியாபாரிகள், கருவாடு வியாபாரிகள் மற்றும் இறைச்சி வியாபாரிகள் ஆகியோரிடம், அவர்கள் இருக்கும் பகுதிக்கு நேரடியாகச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

அத்துடன், சந்தைக்கு வந்திருந்த பொதுமக்களிடமும், தங்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்குமாறு பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது வியாபாரிகளிடம் மீன், கருவாடு குறித்து கேட்டறிந்தார். இந்நிலையில், வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்த கனிமொழியிடம், வ.உ.சி சந்தை வியாபாரி ஒருவர், “இந்த சந்தை இடிக்கப்படாமல் நூற்றுக்கணக்கான வியாபாரிகள் மற்றும் அவர்களது குடும்பத்தின் வாழ்வாதாரத்தை பாதுகாத்த தங்களுக்கு, உதயசூரியன் சின்னத்தில் நாங்கள் மற்றும் எங்கள் குடும்பத்தினர் வாக்களிக்க எங்கள் விரல் நீலும்” என தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து, சந்தை அருகே உள்ள பாரம்பரியமான தூத்துக்குடியின் புகழ் பெற்ற மக்ரூன் தயாரிக்கும் பகுதிக்குச் சென்று, அங்கு பணிபுரியும் ஊழியர்களிடமும் கனிமொழி வாக்கு சேகரித்தார். பின்னர், அவர்களிடம் உலகப் புகழ்மிக்க சுவை மிகுந்த மக்ரூன் எவ்வாறு தயாரிக்கிறார்கள் என்பது குறித்து கேட்டறிந்தார். இந்த பிரச்சாரத்தின் போது மாநகராட்சி மேயர் ஜெகன் மற்றும் திமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

இதையும் படிங்க: திருப்பத்தூர் பிரச்சாரக் கூட்டத்தில் பணம் பட்டுவாடா! திமுக நிர்வாகிகள் இருவர் மீது வழக்குப்பதிவு.. - DMK Election Campaign

ABOUT THE AUTHOR

...view details