11ஆம் வகுப்பு தேர்வில் மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம்.! முதலிடம், கடைசியிடம் யாருக்கு ? - TN 11th Result 2024 - TN 11TH RESULT 2024
TN HSE +1 Result (Out) 2024: 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது, இதில் மாவட்டம் வாரியாக தேர்சி பெற்ற சதவீதம் குறித்து காண்போம்
தேர்வு முடிவுகள் வெளியீடு தொடர்பான கோப்பு படம் (Credits ETV Bharat Tamil Nadu)
சென்னை:தமிழ்நாட்டில் 2023 மற்றும் 2024 கல்வியாண்டிற்கான 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் 4 ஆம் தேதி தொடங்கி மார்ச் 25 ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வினை 7 ஆயிரத்து 534 பள்ளிகளை சேர்ந்த 8 லட்சத்து 11 ஆயிரத்து 172 மாணவ, மாணவிகள் எழுதினர்.
இந்த நிலையில் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று(மே 14) காலை 9.30 மணியளவில் resultsdigilocker.gov.in, www.tnresults.nic.in மற்றும் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டது.
இந்த தேர்வில், 4 லட்சத்து 4 ஆயிரத்து 143 மாணவிகளும், 3 லட்சத்து 35 ஆயிரத்து 396 மாணவர்களும் என மொத்தமாக 7 லட்சத்து 11 ஆயிரத்து 172 மாணவ, மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவர்களை விட 7.43 சதவீதம் மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இந்த தேர்வுகளை 8,221 மாற்றுத்திறனாளி மாணவர், மாணவியர்கள் எழுதிய நிலையில் அதில் 7,504 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதேபோல், 187 சிறைவாசிகள் தேர்வெழுதி 170 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாவட்டம் வாரியாக தேர்ச்சி பெற்ற விவரங்களை பார்க்கும் போது கோயம்புத்தூர் ஈரோடு, திருப்பூர் விருதுநகர், அரியலூர் ஆகிய மாவட்டங்கள் முதல் 5 இடங்களை பிடித்துள்ளன. அதேபோல் திருப்பத்தூர், மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, திருவள்ளூர், வேலூர் ஆகிய ஆகிய மாவட்டங்கள் கடைசி 5 இடங்களை பிடித்துள்ளன
11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாவட்டம் வாரியாக தேர்ச்சி விகிதம்:
சென்னை
91.68%
கோயம்புத்தூர்
96.02%
மதுரை
92.07%
திருச்சி
94.00%
சேலம்
91.30%
திருப்பூர்
95.23%
ஈரோடு
95.56%
விருதுநகர்
95.06%
அரியலூர்
94.96
பெரம்பலூர்
94.82%
சிவகங்கை
94.57%
கன்னியாகுமரி
93.96%
தூத்துக்குடி
93.86%
திருநெல்வேலி
93.32%
தென்காசி
93.02%
ராமநாதபுரம்
92.83%
நாமக்கல்
92.58%
கரூர்
92.28%
ஊட்டி
91.37%
நாகப்பட்டினம்
91.09%
கூடலூர்
91.01%
செங்கல்பட்டு
90.85%
தர்மபுரி
90.49%
தேனி
90.09%
திண்டுக்கல்
89.97%
விழுப்புரம்
89.41%
தஞ்சாவூர்
89.07%
திருவண்ணாமலை
88.91%
புதுக்கோட்டை
88.02%
ராணிப்பேட்டை
87.86%
கிருஷ்ணகிரி
87.82%
திருவாரூர்
87.15 %
காஞ்சிபுரம்
86.98%
திருப்பத்தூர்
86.88%
மயிலாடுதுறை
86.39%
கள்ளக்குறிச்சி
86.00%
திருவள்ளூர்
85.54%
வேலூர்
81.40%
11 ஆம் வகுப்பு பொதுத்தேர்தலில் 100% தேர்ச்சி பெற்ற மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை 1964 ஆக உள்ள நிலையில், 100% தேர்ச்சி பெற்ற அரசு மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை 241 ஆக உள்ளது என்பது குறிப்பிடதக்கது.