தேனி:சர்வதேச போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, தேனியில் சைக்கிள் பேரணி நடைபெற்றது. தேனி மாவட்ட காவல்துறை மற்றும் தனியார் சைக்கிள் நிறுவனம் சார்பில் போதைப்பொருள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சைக்கிள் பேரணி நடைபெற்றது. இந்த சைக்கிள் பேரணியை தேனி மாவட்ட ஆட்சியர் ஷஜுவனா கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இந்த பேரணி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து தொடங்கி அன்னஞ்சி விலக்கு வழியாக தனியார் சைக்கிள் நிறுவனத்தை இறுதியாக வந்தடைந்தது. சுமார் 10 கிலோமீட்டர் தூரம் வரை நடைபெற்றது. இதில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வமுடன் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு போதைப் பொருள் குறித்தான விழிப்புணர்வை ஏற்படுத்தி சென்றனர்.