சென்னை: தமிழ்நாடு கல்லூரிக் கல்வி இயக்குநர் கார்மேகம், அனைத்து கல்லூரி முதல்வர்களுக்கும் அனுப்பியுள்ள கடிதத்தில், 2023-24 ஆம் கல்வி ஆண்டின் இறுதி வேலைநாள் மற்றும் 2024-25 ஆம் ஆண்டு தொடக்க நாள் குறித்து கீழ்க்கண்ட அறிவுரைகள் வழங்கப்படுகிறது.
தமிழகத்தில் கோடை விடுமுறைக்குப் பின் ஜூன் 19ல் கல்லூரிகள் திறப்பு! - COLLEGE REOPEN ON TAMILNADU - COLLEGE REOPEN ON TAMILNADU
College Reopen: தமிழ்நாட்டில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் சுயநிதி கலை அறிவியல் கல்லூரிகள் கோடை விடுமுறைக்கு பின்னர் ஜூன் 19ஆம் தேதி மீண்டும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Published : Apr 5, 2024, 7:05 PM IST
|Updated : Apr 5, 2024, 8:27 PM IST
2023-2024ஆம் கல்வியாண்டில் பல்கலைக்கழகம் நிர்ணயம் செய்த மொத்த வேலை நாட்களுக்குக் குறையாமல் உள்ளது என்பதைக் கல்லூரி முதல்வர்களே உறுதி செய்து கொண்டு கல்லூரி இறுதிப் பணி நாளை நிர்ணயித்துக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது. மேலும், 2024-2025 ஆம் கல்வியாண்டில் கோடை விடுமுறைக்குப் பின் கல்லூரிகள் மீண்டும் திறக்கும் நாளாக 19.6.2024 புதன் கிழமை அறிவிக்கப்படும் என கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:மத்திய அமைச்சர் அமித்ஷாவின் தமிழக பயணம் திடீர் ரத்து! என்ன காரணம்? - Amit Shah Tn Visit Cancel