கோயம்புத்தூர்: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த வனப்பகுதியில் உள்ள பத்தரகாளியம்மன் கோயில் அருகே பவானி ஆற்றில் குளிக்க வரும் நபர்களை, சிலர் ஆற்றில் மூழ்கடிக்கச் செய்து கொலை செய்வதாகவும், பின்பு அவர்களது உடலை மீட்க பணம் பேரம் பேசி அதை ஒரு தொழிலாகவே சிலர் செய்து வருவதாகவும் இயக்குநர் பாக்யராஜ் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஓன்றை பதிவிட்டு இருந்தார்.
இது சமூக வலைத்தளங்களில் வைரலானதோடு, மக்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இயக்குநர் பாக்கியராஜின் கருத்துக்கு மறுப்பு தெரிவிக்கும் விதத்தில் கோவை மாவட்ட காவல்துறை அறிக்கை ஒன்று நேற்று (பிப். 13) வெளியிட்டது. அதில் பவானி ஆற்றில் செயற்கையாக மரணங்கள் ஏற்படுத்தப்படுவதாக பரவும் வதந்திகள் ஆதாரமற்றது எனக் குறிப்பிடப்பட்டு இருந்தது.
மேலும், "இதுவரை பவானி ஆற்றுப் பகுதியில் இதுபோன்ற கொலை சம்பவங்கள் எதுவும் நடந்ததாக மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் எந்தவித வழக்குகளும் பதியப்படவில்லை. பவானி ஆறு, மேட்டுப்பாளையம், காரமடை, மற்றும் சிறுமுகை ஆகிய மூன்று காவல் நிலைய எல்லைகளில் உள்ள சுமார் 20 கிராமங்கள் வழியாக செல்கிறது.
இதையும் படிங்க:கோவை மக்களின் குடிநீர் பிரச்னைக்கான தீர்வு என்ன? - சட்டப்பேரவையில் அமைச்சர் கே.என் நேரு பதில்!