கோயம்புத்தூர்:பாட்டாளி மக்கள் கட்சியின் கோவை மாவட்டச் செயலாளராக இருப்பவர் அசோக் ஸ்ரீநிதி. இவர் கோவை மாநகர காவல் ஆணையரிடம் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில் கடந்த ஜூலை 30ஆம் தேதி அவினாசி சாலையில், துணிக்கடையில் துணி எடுத்து விட்டு வந்த தன்னை இருசக்கர வாகனத்தில் வந்த 3 நபர்கள் கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும், இதுகுறித்து புகார் அளித்தும் இதுவரை சம்பந்தபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவித்துள்ளார்.
My V3 Ads நிறுவனத்திற்கு எதிராக, அதன் மோசடிகளை வெளிப்படுத்த துவங்கியதில் இருந்து தனக்கு தொடர்ந்து மிரட்டல்கள் வருவதாகவும், இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இருந்தாலும், உரிய நடவடிக்கை எடுக்கவில்லை, எனவே அவர்களிடமிருந்து தப்பி அருகில் இருந்த கடைக்குள் புகுந்ததாகக் கூறி அன்றைய தினம் பதிவாகி இருந்த சிசிடிவி காட்சிகளையும் அசோக் ஸ்ரீ நிதி வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில், சம்பவம் குறித்து அசோக் ஸ்ரீநிதி கோவை பந்தய சாலை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் இரு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து இருப்பதாகவும், My V3 Ads நிறுவனத்திற்கு எதிராக செயல்பட்டதால்தான் தன்னை மர்ம நபர்கள் தாக்க முயன்றார்கள் எனக் குறிப்பிட்டுட்டிருந்தார்.