கோயம்புத்தூர்:மிகவும் மதிக்கப்படும் ஆன்மிகவாதியான வள்ளலார் ராமலிங்கம் அடிகளாரின் நினைவு தினமான ஜனவரி 24-ஆம் தேதி வள்ளலார் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. “வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம், வாடினேன், பசியினால் இளைத்தே வீடுதோ ரறிந்தும் பசியறா தயர்ந்த வெற்றரைக் கண்டுளம் பதைத்தேன்” என்ற புகழ் பெற்ற வாசகத்தை எடுத்துரைத்த அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில், அவரது நினைவு தினமாக கடைப்பிடிக்கப்படும் வரும் ஜனவரி 24 ஆம் தேதியன்று இறைச்சிக் கடைகள் இயங்க தடை விதித்து கோயம்புத்தூர் மாநகராட்சி என்று அறிவித்து உள்ளது.
கோயம்புத்தூரில் வருகின்ற ஜனவரி 25 ஆம் தேதி வள்ளலார் தினத்தை முன்னிட்டு இறைச்சி விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டு உள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் அறிவித்து உள்ளது. இது குறித்து கோயம்புத்தூர் மாநகராட்சி நிர்வாகம் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “எதிர் வரும் 25.01.2024 அன்று ‘வள்ளலார் தினம்’ அனுசரிக்கப்படுவதால் அன்றைய தினம் ஆடு, மாடு மற்றும் கோழிகளை வதை செய்வதற்கும், இறைச்சிகளை விற்பனை செய்வதற்கும் தமிழக அரசால் தடை செய்யப்பட்டு உள்ளது.