தமிழ்நாடு

tamil nadu

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 1, 2024, 3:40 PM IST

Updated : Aug 1, 2024, 3:52 PM IST

ETV Bharat / state

கோவை மலைப் பகுதிகளில் தொடரும் மழை.. தயார் நிலையில் மாவட்ட நிர்வாகம் - ஆட்சியர் தகவல்! - COLLECTOR ON VALPARAI LANDSLIDE

COLLECTOR ON VALPARAI LANDSLIDE: கோவையின் வால்பாறை, ஆனைமலை, பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவிலான மழை பெய்து வருகிறது. எனவே, இதற்கு ஏதுவான பாதுகாப்பு பணிகளுடன் மாவட்ட நிர்வாகம் தயாராக இருப்பதாக ஆட்சியர் கிராந்தி குமார் பாடி தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி
கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி (Credits- ETV Bharat Tamil Nadu)

கோயம்புத்தூர்:தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில், மழைநீர் சேகரிப்பின் முக்கியத்துவம் தொடர்பான விழிப்புணர்வு குறும்படம் காணொளி வாகனத்தை கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியார் கிராந்தி குமார் பாடி துவக்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த மாவட்ட ஆட்சியர், “கோவையில் அதிக அளவிலான மழை வால்பாறை, ஆனைமலை, பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளில் பெய்து வருகிறது.

ஆட்சியர் கிராந்தி குமார் பாடி பேட்டி (Credits- ETV Bharat Tamil Nadu)

கோடை காலத்திலேயே தூர்வாரும் பணிகள் மேற்கொண்டதால் மழைக்காலங்களில் பெரிதளவு பாதிப்பில்லை. மேலும், மழை நீர் குளம், குட்டைகளுக்கு சரியான பாதையில் சென்றடைகிறது. வால்பாறையில் மண் சரிவால் இரண்டு உயிரிழப்புகள் ஏற்பட்டு உள்ளது. எனவே, மழை தொடர்பாக தமிழக அரசு சார்பில் பல்வேறு அறிவுரைகள் கொடுத்து வருகின்றனர்.

மேலும், வால்பாறையில் தீவிர ஆய்வு மேற்கொண்டுள்ளோம். அதில் நிலச்சரிவு ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ள பகுதிகளில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வால்பாறை முழுவதும் தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதேபோல், அப்பகுதியில் புதிதாக கட்டப்படக்கூடிய கட்டிடங்களை முறையாக ஆய்வு செய்து அனுமதி கொடுக்க வேண்டுமென தெரிவித்துள்ளோம்.

அதுமட்டுமின்றி, மாநில அளவிலான பேரிடர் மேலாண்மைக் குழுவை வயநாடு அனுப்பியுள்ளோம். மேலும், முன்னெச்சரிக்கையாக மேட்டுப்பாளையம், வால்பாறையில் இக்குழுவினர் உள்ளனர். இதற்கு பொறுப்பாக மாவட்ட கண்காணிப்பாளராக நந்தகுமாரை நியமித்துள்ளனர். இவர் தொடர்ந்து மழை தடுப்பு நடவடிக்கைகளை கண்காணித்து வருகிறார்.

அபாயகரமான வீட்டில் தங்கக்கூடாது என தெரிவித்து வருகிறோம். மேலும், சுற்றுலாப் பயணிகள் நீர்நிலைகள் அதிகமாக இருக்கக்கூடிய இடத்திற்குச் செல்லக்கூடாது, பாதுகாப்பாக இருக்க வேண்டுமென அறிவுறுத்தி வருகிறோம். கோவை மாவட்டத்தில் பெரும்பாலான சுற்றுலா இடங்கள் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியான வனப்பகுதியில் உள்ளன.

எனவே, அந்த பகுதிகளில் போலீசார் மற்றும் வனத்துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட அறுவுறுதியுள்ளோம். மேலும், கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது. எந்த நேரத்திலும் மக்கள் தொடர்பு கொண்டாலும் அதற்கான நிவாரணம் வழங்கப்படும்” என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits- ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க:நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்!

Last Updated : Aug 1, 2024, 3:52 PM IST

ABOUT THE AUTHOR

...view details