சென்னை:புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தியில், இந்தியாவிலேயே தமிழ்நாடு மூன்றாவது மாநிலமாக திகழ்கிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு காலநிலை மாற்றத்திற்கான நிர்வாக குழுவின் இரண்டாவது கூட்டம், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், தலைமைச் செயலகத்தில் நேற்று (டிசம்பர் 5) வியாழைக்கிழமை நடைபெற்றுள்ளது. இதில் முதலமைச்சர் கலந்துக்கொண்டு பேசியதாவது, “காலநிலை மாற்றம்தான் மனித சமுதாயம் எதிர்கொள்ள இருக்கக்கூடிய மாபெரும் சவால். அதை எதிர்கொள்வதற்கான செயல்திட்டங்களையும் தீட்டி வருகிறோம்என்றார். மேலும் இதற்காக,
- தமிழ்நாடு பசுமை காலநிலை நிறுவனம்
- தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கம்
- பசுமைத் தமிழ்நாடு இயக்கம்
- தமிழ்நாடு ஈரநில இயக்கம்
- தமிழ்நாடு நெய்தல் மீட்சி இயக்கம் ஆகிய இயக்கங்கள் உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.
காலநிலை நிர்வாகக் குழு:
காலநிலை இயக்கங்கள், திட்டமிடுதல்கள் வேறு எந்த மாநிலத்திலும் எடுக்கப்படவில்லை. இந்த இயக்கங்களுக்குக் கொள்கை வழிகாட்டவும், ஆலோசனைகள் வழங்கவும், காலநிலை மாற்றத்திற்கான நிர்வாகக் குழுவை தமிழ்நாடு அரசு உருவாக்கியுள்ளது.
இந்தக் குழுவின் கடமை, காலநிலை மாற்றம் குறித்த தமிழ்நாடு அரசின் மாநில செயல் திட்டத்துக்கு ஒப்புதல் அளிப்பது. இக்குழு இந்தியாவிலேயே காலநிலை மாற்றத்திற்காக அமைக்கப்பட்ட முதல் நிர்வாகக் குழு.
இந்தியாவிற்கு முன்னோடி தமிழ்நாடு:
காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதில், மற்ற மாநிலங்களுக்கு ஒரு முன்னுதாரணமாக தமிழ்நாடு இருக்கிறது. தமிழ்நாடு, இந்தியாவிற்கே முன்னோடி மாநிலமாக உள்ளது. 2070-ஆம் ஆண்டுக்குள், ‘நெட் ஜீரோ எமிஷன்’(Net-zero emissions) எட்டுவதற்கான வழிகாட்டியாக இந்த காலநிலை மாற்ற இயக்கம் திகழ்கிறது. இதற்கு உறுதுணையாக உருவாக்கப்பட்டுள்ள ‘பசுமைத் தமிழ்நாடு இயக்கம்’ (Green Tamil Nadu Movement) மூலம், ‘Biodiversity’-யை முன்னிறுத்தவும் ‘Carbon Sink’-ஐ அதிகரிக்கவும், ஏற்கெனவே 8.3 கோடி மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது.
புல்வெளி கோப்புப்படம் (X / @mkstalin) இதையும் படிங்க:தகுதி இல்லையா?.. தேர்வுக்குப்பின் விதிகளை மாற்றிய டிஎன்பிஎஸ்சி - 27 ஆயிரம் பட்டதாரிகளின் நிலை என்ன?
கடற்கரையை வலுப்படுத்துகின்ற வகையில், ‘தமிழ்நாடு நெய்தல் மீட்சி இயக்கம்’ உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த இயக்கத்தின் மூலமாக, ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவுக்கு ‘அலையாத்திக் காடுகள்’ (Mangrove), ‘கடல் புற்கள்’ (Seagrasses) உருவாக்குதல் மற்றும் மீட்டெடுத்தல் போன்ற முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டு வருகிறது. இவை கடல் அரிப்பிலிருந்து கடற்கரைகளை பாதுக்காக்கிறது.
அலையாத்திக் காடுகள் (X / @mkstalin) புதுப்பிக்கத்தக்க ஆற்றல்:
தமிழ்நாடு, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் (Renewable energy) உற்பத்தியில், இந்தியாவிலேயே மூன்றாவது மாநிலமாக இருக்கிறது. காற்றாலை (Windmill) மூலமாக ஆண்டுக்கு 11 ஆயிரத்து 900 மில்லியன் யூனிட் மின்சாரம் கிடைக்கிறது. 2030 -ஆம் ஆண்டுக்குள், தமிழ்நாட்டினுடைய 50 விழுக்காடு ஆற்றல், ‘புதுப்பிக்கத்தக்க ஆற்றல்’ மூலம் பெறுவதை குறிக்கோளாக கொண்டுள்ளது” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.