சென்னை:சென்னை மாவட்டத்தை உள்ளடக்கிய 16 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியல்கள் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள், வாக்குப்பதிவு அலுவலர்கள் மற்றும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டமானது சென்னை மாவட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளர் அனில் மேஸ்ரம் தலைமையில் நடைபெற்றது.
ஆலோசனைக் கூட்டம்:ரிப்பன் மாளிகையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக்கூட்டத்தில் அதிமுக சார்பாக மாவட்ட செயலாளர்கள் தியாகராய நகர் சத்யா, ஆர்.எஸ்.ராஜேஷ், திமுக சார்பில் வழக்கறிஞர் மருது கணேஷ், பாஜக சார்பில் கராத்தே தியாகராஜன் உட்பட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் பேசிய கட்சி பிரதிநிதிகள், 16,17 ஆம் தேதிகளில் நடைபெற்ற சிறப்பு வாக்காளர் முகாமில் வாக்காளர்களின் விவரங்கள் பூத் வாரியாக இல்லாமல் சீரியல் வரிசையாக உள்ளது. இதனால் முறையாக சரி பார்க்க முடியவில்லை பூத் வாரியாக கொடுத்தால் சோதனை செய்ய சரியாக இருக்கும். இறந்தவர்கள் பெயரை இன்னுமும் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்க வில்லை. வாக்காளர் பெயர் சேர்த்தல் நீக்குதல் உள்ளிட்டவற்றை அரசு முறையாக செய்ய வேண்டும் உள்ளிட்ட பிரச்சனைகளை எடுத்துரைத்தனர்.
பாஜக தியாகராஜன்:இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பாஜக பிரதிநிதி கராத்தே தியாகராஜன் கூறியதாவது,"பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான குமரகுருபரன் தொடர்ந்து இந்த கூட்டத்தை புறக்கணித்து வருகிறார். வாக்காளர் பட்டியலில் நிறைய குளறுபடிகள் நடைபெறுகிறது.
பல புகார்களை கொடுத்து இருக்கிறோம். எங்கள் புகாரை அவர் எடுத்து கொண்டிருக்கிறார். குமரகுருபரன் மீது ஏற்கனவே புகார் கொடுத்திருக்கிறோம். இன்றைய கூட்டத்திலும் அவர் பங்கேற்கவில்லை எங்களுடைய கருத்துக்களை தெரிவித்து இருக்கிறோம்.
2026 ஜனவரி மாதம் வரக்கூடிய வாக்காளர் பட்டியல் தான் இறுதி வாக்காளர் பட்டியல்.