டெல்லி: தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய நிதி குறித்து விவாதிக்க நேற்று டெல்லி சென்றார். அதனை தொடர்ந்து இன்று (செப்.27) டெல்லியின் லோக் கல்யாண மார்க்கல் உள்ள பிரதமரின் அதிகாரபூர்வ இல்லத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடியை சந்தித்தார்.
அப்போது, சென்னை மெட்ரோ ரயிலின் 2ஆம் கட்ட பணிகளுக்கான தேவையான நிதி, சமக்ரசிக்ஷா அபியான் திட்டத்துக்கான நிதி, இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் சிறைபிடிக்கப்படுவதை தடுக்க நிரந்தர தீர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினார்.
சென்னையில், 2ம் கட்ட மெட்ரோ பணிகளுக்கு ரூ.63,746 கோடி நிதி திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால், இதற்கு மத்திய அரசு நிதி ஒதுக்காததால் குறிப்பிட்ட காலத்திற்குள் பணி நிறைவடையுமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.