தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சமரச தீர்வு மைய விழிப்புணர்வு பேரணி சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது.. - Conciliation Center awareness

Conciliation Center: சமரசத் தீர்வு மையத்தின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு பேரணியைச் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கங்காபூர்வாலா தொடங்கி வைத்தார்.

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 8, 2024, 7:05 PM IST

Conciliation Center
சமரச தீர்வு மையம்

சென்னை: நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு, அதிக செலவின்றி விரைவாகத் தீர்வு பெறச் சமரச தீர்வு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுச் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. சமரச தீர்வு மையங்களை வழக்காடிகள் அதிகம் பயன்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் இன்று (ஏப்.8) சென்னை உயர்நீதிமன்றத்தில் சட்டக் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கங்காபூர்வாலா இந்த பேரணியைக் கொடியசைத்துத் துவக்கி வைத்தார். இந்த நிகழ்விற்கு உயர்நீதிமன்றத்தின் மூத்த நீதிபதியும், சமரச தீர்வு மையத்தின் தலைவருமான ஆர்.மகாதேவன் தலைமை வகித்தார்.

இந்த நிகழ்ச்சியில் நீதிபதிகள் அனிதா சுமந்த், ஜி.கே.இளந்திரையன், சத்திய நாராயண பிரசாத், பரத சக்கரவர்த்தி உள்ளிட்ட நீதிபதிகள் பங்கேற்றனர். நூற்றுக்கணக்கான சட்டக் கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாறு உயர்நீதிமன்ற வளாகத்தைச் சுற்றி வலம் வந்தனர்.

இதையும் படிங்க:''திமுக, பாஜகவோடு கூட்டணி வைக்கும் போது, சமூக நீதிப் பேசிக் கொண்டிருந்ததா?'' - சீமான் கேள்வி! - Lok Sabha Election 2024

ABOUT THE AUTHOR

...view details