தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மக்களவைத் தேர்தல் 2024: மீண்டும் சிதம்பரத்தை கைப்பற்றிய திருமாவளவன்! - Chidambaram Election Result 2024 - CHIDAMBARAM ELECTION RESULT 2024

Chidambaram Election Results 2024 Live Updates பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. இந்தியா முழுவதும் எந்த தொகுதியில் எந்த வேட்பாளர் முன்னிலை வகிக்கிறார் என்ற தகவல்களை நொடிக்கு நொடி களத்திலிருந்து நேரடியாக வழங்கிக் கொண்டிருக்கிறது ஈடிவி பாரத்.

சிதம்பரம் தொகுதி வேட்பாளர்கள்
சிதம்பரம் தொகுதி வேட்பாளர்கள் (credits - ETV Bharat Tamil NADU)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 3, 2024, 11:06 PM IST

Updated : Jun 4, 2024, 7:27 AM IST

சிதம்பரம்:சிதம்பரம் மக்களவை தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அதிமுக வேட்பாளர் சந்திரகாசனை விட 1,07,504 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியை உறுதி செய்துள்ளார்.

*இந்திய தேர்தல் ஆணையத்தின் இணையத்தள விபரம்..

வ.எண் வேட்பாளர் கட்சி பெற்ற வாக்குகள்
1. திருமாவளவன் வி.சி.க 4,64,565
2. மா.சந்திரகாசன் அ.தி.மு.க 3,57,372
3. பா. கார்த்தியாயினி பா.ஜ.க 1,50,654
4. இரா.ஜான்சிராணி நா.த.க 60,172
  • சிதம்பரம் மக்களவைத் தொகுதியில், 10 வது சுற்று வாக்கு எண்ணிக்கையில் விசிக 52,571 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளது. அக்கட்சியின் வேட்பாளர் தொல். திருமாவளவன் 242622 வாக்குகளை பெற்றுள்ளார். அதிமுக வேட்பாளர் மா.சந்திரகாசன் 195051 வாக்குகளும், பாஜகவின் பா. கார்த்தியாயினி 77374 நாம் தமிழர் கட்சி வேட்பாளர் இரா.ஜான்சிராணி 31088 வாக்குகளும் பெற்றுள்ளனர்.
  • காலை 9:45 நிலவரப்படி, சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் விசிக தலைவர் தொல் திருமாவளவன் 18,580 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் சந்திரகாசன் 12, 824 வாக்குகளும் பெற்றுள்ளனர். 5756 வாக்குகள் வித்தியாசத்தில் திருமாவளவன் முன்னிவை வகிக்கிறார்.

2024 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில், சிதம்பரம் தொகுதியில் திமுக கூட்டணியில் மீண்டும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் போட்டியிட்டிருந்தார். அதிமுக சார்பில் சந்திரகாசன், பாஜக சார்பில் கார்த்தியாயினி, நாம் தமிழர் கட்சி சார்பில் ஜான்சிராணி உள்ளிட்டோர் களமிறங்கி இருந்தனர். 2024 தேர்தலில் மொத்தம் 11,60,762 (76.37%) வாக்குகள் பதிவாகின.

2019 தேர்தலில் வென்றது யார்?: 2019 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில், விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் போட்டியிட்ட திருமாவளவன் 5,00,229 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து அதிமுக சார்பில் போட்டியிட்ட சந்திரகாசன் 4,97,010 வாக்குகள் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது 3,000-க்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் திருமாவளவன் வெற்றி பெற்றார். இந்த தேர்தலில், மொத்தம் 11,53,192 (80.1%) வாக்குகள் பதிவாகின.

இதையும் படிங்க:தமிழ்நாடு மக்களவைத் தேர்தல் 2024; சிதம்பரத்தில் விசிக வியூகம் பலிக்குமா அல்லது அதிமுக வெல்லுமா? - Lok Sabha Election 2024

Last Updated : Jun 4, 2024, 7:27 AM IST

ABOUT THE AUTHOR

...view details