சென்னை:பொங்கல் பண்டிகை விடுமுறையை முன்னிட்டு நாளை முதல் ஜனவரி 17 வரை சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, நாளை, ஜனவரி 15 மற்றும் 16 ஆம் தேதிகளில் ஞாயிறு அட்டவணையின் படியும், 17 ஆம் தேதி சனிக்கிழமை அட்டவணையின் படியும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
பொங்கல் பண்டிகை நாளை (ஜனவரி 14) செவ்வாய்க்கிழமை கொண்டாடப்படுகிறது. இதற்காக தமிழக அரசு, நாளை முதல் ஜனவரி 17 ஆம் தேதி வரை விடுமுறை அளித்துள்ளது. பொங்கல் விடுமுறையையொட்டி ஏராளமான மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர். இந்த நிலையில், ஜனவரி 14ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரையிலான மெட்ரோ ரயில் சேவைக்கான அட்டவணையை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தனது எக்ஸ் தள பதிவில், “பொங்கல் பண்டிகை விடுமுறையை முன்னிட்டு, 2025 ஆம் ஆண்டு ஜனவரி 14 (செவ்வாய்க்கிழமை), 15 (புதன்கிழமை) மற்றும் 16 (வியாழக்கிழமை) ஆம் தேதிகளில் ஞாயிறு நேர அட்டவணையின் படியும், 17 (வெள்ளிக்கிழமை) ஆம் தேதி சனிக்கிழமை அட்டவணையின் படியும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.