சென்னை: தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் அடுத்த 4 நாட்களுக்கு தமிழகத்தில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக உள்ளது. அநேக இடங்களில் மழை பெய்துள்ளது. புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசான மழை பதிவாகியுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):
மாவட்டம் | மழை அளவு (சென்டிமீட்டரில்) |
புதுக்கோட்டை (புதுக்கோட்டை) | 9 சென்டிமீட்டர் |
தாலுகா அலுவலகம் பந்தலூர் (நீலகிரி) | 8 சென்டிமீட்டர் |
பெருங்களூர் (புதுக்கோட்டை), பாலக்கோடு (தர்மபுரி), மிமிசல் (புதுக்கோட்டை), பொன்னேரி (திருவள்ளூர்), பரங்கிப்பேட்டை (கடலூர்), கேஆர்பி அணை (கிருஷ்ணகிரி), திருமங்கலம் (மதுரை), சிங்கம்புணரி (சிவகங்கை) | 7 சென்டிமீட்டர் |
பெலாந்துறை (கடலூர்), விருதாச்சலம் (கடலூர்), ஆலந்தூர் (சென்னை), சென்னை விமானநிலையம் (சென்னை), மீனம்பாக்கம் AWS (சென்னை), டிஜிபி அலுவலகம் (சென்னை), கரூர் (கரூர்), மேற்கு தாம்பரம் SIT ARG (செங்கல்பட்டு), அன்னவாசல் (புதுக்கோட்டை) | 6 சென்டிமீட்டர் |
கெலவரப்பள்ளி அணை (கிருஷ்ணகிரி), ஆலங்குடி (புதுக்கோட்டை), குப்பநத்தம் (கடலூர்), விருதாச்சலம் KVK AWS (கடலூர்), தீர்த்தாண்டதானம் (ராமநாதபுரம்), கல்லந்திரி (மதுரை), குன்றத்தூர் (காஞ்சிபுரம்), வம்பன் KVK AWS (புதுக்கோட்டை), கொத்தவாச்சேரி (கடலூர்), குடிமியான்மலை (புதுக்கோட்டை), திருப்பத்தூர் (சிவகங்கை), எண்ணூர் AWS (சென்னை), திருக்கழுக்குன்றம் (செங்கல்பட்டு) | 5 சென்டிமீட்டர் |
அதிகபட்ச வெப்பநிலை :அதிகபட்ச வெப்பநிலை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக இயல்பை ஒட்டியும், இயல்பை விட சற்று அதிகமாகவும் இருந்தது. அதிகபட்ச வெப்பநிலை கரூர் பரமத்தியில் 38.2 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.
தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 33 டிகிரி முதல் 38 டிகிரி செல்சியஸ், வடதமிழக கடலோரப்பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 34 டிகிரி முதல் 37 டிகிரி செல்சியஸ், தென்தமிழக கடலோரப்பகுதிகளில் 30 டிகிரி முதல் 35 டிகிரி செல்சியஸ் மற்றும் மலைப் பகுதிகளில் 20 டிகிரி முதல் 27 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது
அதிகபட்ச வெப்பநிலை சென்னை மீனம்பாக்கத்தில் 37.4 டிகிரி செல்சியஸ் (-0.6 டிகிரி செல்சியஸ்) மற்றும் நுங்கம்பாக்கத்தில் 36.3 டிகிரி செல்சியஸ் (-1.2 டிகிரி செல்சியஸ்) பதிவாகியுள்ளது.
அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை:தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இன்று, தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப்பகுதிகள், நீலகிரி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, கரூர், கடலூர், மயிலாடுதுறை, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, இராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
நாளை, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
ஜூன் 8 ஆம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.ஜூன் 9 முதல் 12 வரையில், தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.