சென்னை: மதுரையில் தொடரும் வெயிலின் காரணமாக 100 பாரன்ஹீட் தொடர்கிறது. வடதமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. தென்தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):
மாவட்டம் | மழை அளவு (சென்டிமீட்டரில்) |
பொன்னை அணை (வேலூர்), மாதவரம் (சென்னை), R.K.பேட்டை ARG (திருவள்ளூர்), கொளத்தூர் (சென்னை), ஆர்.கே.பேட்டை (திருவள்ளூர்) | 4 சென்டிமீட்டர் |
திரு.வி.க.நகர் (சென்னை), திருத்தணி AWS (திருவள்ளூர்), திருத்தணி PTO (திருவள்ளூர்), பெரம்பூர் (சென்னை), திருத்தணி (திருவள்ளூர்), புழல் (சென்னை),வானகரம் (சென்னை), மணலி (சென்னை), அம்பத்தூர் (சென்னை), வில்லிவாக்கம் ARG (திருவள்ளூர்) | 3 சென்டிமீட்டர் |
கத்திவாக்கம் (சென்னை), CD மருத்துவமனை தண்டையார்பேட்டை (சென்னை) | 2 சென்டிமீட்டர் |
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான வெப்பநிலை (சமவெளிப்பகுதிகள்):
அதிகபட்ச வெப்பநிலை: மதுரை விமான நிலையம் - 40.3 டிகிரி செல்சியஸ்
குறைந்தபட்ச வெப்பநிலை: ஈரோடு -19.0 டிகிரி செல்சியஸ்
அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை:மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்றும், நாளையும் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
செப்டம்பர் 21 முதல் 25 வரையில், தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகத்தில் அடுத்த 2 தினங்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2 டிகிரி - 4 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.