தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நாளை உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.. வானிலை ஆய்வு மையம் முக்கிய எச்சரிக்கை! - TN Weather Update

TN Weather Update: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, நாளை காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் கோப்புப்படம்
சென்னை வானிலை ஆய்வு மையம் கோப்புப்படம் (credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 21, 2024, 3:14 PM IST

சென்னை:தமிழக உள் மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும், கடலோர மாவட்டங்களில் அநேக இடங்களிலும் மழை பெய்துள்ளது. புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் மிக லேசான மழை பதிவாகியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):

மாவட்டம் மழை அளவு (சென்டிமீட்டரில்)
புதுச்சத்திரம் (நாமக்கல்) 16 சென்டிமீட்டர்
கல்லணை (தஞ்சாவூர்) 14 சென்டிமீட்டர்
கரூர் (கரூர்), திருச்சிராப்பள்ளி விமானநிலையம் (திருச்சிராப்பள்ளி) 13 சென்டிமீட்டர்
சின்னக்கல்லார் (கோயம்புத்தூர்), சமயபுரம் (திருச்சிராப்பள்ளி) 12 சென்டிமீட்டர்
தலா , சேந்தமங்கலம் (நாமக்கல்), நாமக்கல் (நாமக்கல்) 11 சென்டிமீட்டர்
ராசிபுரம் (நாமக்கல்), விராலிமலை (புதுக்கோட்டை), பஞ்சப்பட்டி (கரூர்), தொண்டி (ராமநாதபுரம்) 10 சென்டிமீட்டர்
சிவகங்கை (சிவகங்கை), ஏற்காடு (சேலம்), சென்னிமலை (ஈரோடு) 9 சென்டிமீட்டர்
ஒகேனக்கல் (தர்மபுரி), திருச்சிராப்பள்ளி சந்திப்பு (திருச்சிராப்பள்ளி), லால்குடி (திருச்சிராப்பள்ளி), வால்பாறை PAP (கோயம்புத்தூர்), சங்கரி துர்க்கம் (சேலம்), கிருஷ்ணராயபுரம் (கரூர்), தீர்த்தாண்டதானம் (ராமநாதபுரம்), சேலம் (சேலம்), காரையூர் (புதுக்கோட்டை) 8 சென்டிமீட்டர்
டேனிஷ்பேட்டை (சேலம்), மணப்பாறை (திருச்சிராப்பள்ளி), சங்கராபுரம் (கள்ளக்குறிச்சி), எருமைப்பட்டி (நாமக்கல்), நம்பியூர் (ஈரோடு), பார்வூட் (நீலகிரி), அன்னவாசல் (புதுக்கோட்டை), பெருந்துறை (ஈரோடு), குருவாடி (அரியலூர்), திருச்சிராப்பள்ளி நகரம் (திருச்சிராப்பள்ளி), நாமக்கல் (நாமக்கல்), குடிமியான்மலை (புதுக்கோட்டை), முள்ளங்கினாவிளை (கன்னியாகுமரி), சின்கோனா (கோயம்புத்தூர்), வத்தலை அணைக்கட்டு (திருச்சிராப்பள்ளி), வட்டானம் (ராமநாதபுரம்), குமாரபாளையம் (நாமக்கல்) 7 சென்டிமீட்டர்

அதிகபட்ச வெப்பநிலை:அதிகபட்ச வெப்பநிலை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக இயல்பை விட குறைவாக இருந்தது. அதிகபட்ச வெப்பநிலை திருத்தணியில் 36.7 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 33 டிகிரி முதல் 37 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.

தமிழக கடலோரப்பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 30 டிகிரி முதல் 34 டிகிரி செல்சியஸ் மற்றும் மலைப் பகுதிகளில் 19 டிகிரி முதல் 25 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை சென்னை மீனம்பாக்கத்தில் 35.7 டிகிரி செல்சியஸ் (-2.7 டிகிரி செல்சியஸ்) மற்றும் நுங்கம்பாக்கத்தில் 35.2 டிகிரி செல்சியஸ் (-2.2 டிகிரி செல்சியஸ்) பதிவாகியுள்ளது.

அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை:தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, நாளை (22 ஆம் தேதி வாக்கில்) ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது வடகிழக்கு திசையில் நகர்ந்து, 24 ஆம் தேதி காலை, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக, மத்திய வங்கக்கடல் பகுதிகளில் நிலவக்கூடும். அதன் பிறகு, இது மேலும் வலுப்பெற்று வடகிழக்கு திசையில் நகரக்கூடும்.

இன்று, தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

கோயம்புத்தூர், திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், நீலகிரி, மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

தமிழகத்தில் நாளை ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

மே 23 ஆம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், மதுரை, திண்டுக்கல் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

மே 24 ஆம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. மே 25 முதல் 27 வரையில், தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அடுத்த ஐந்து தினங்களுக்கான அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:

இன்று முதல் மே 25 வரைஅடுத்த 5 தினங்களுக்கு, அதிகபட்ச வெப்பநிலை, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக 2-3° செல்சியஸ் படிப்படியாக உயரக்கூடும். அடுத்த 24 மணி நேரத்திற்கு, அதிகபட்ச வெப்பநிலை, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் 2-3° செல்சியஸ் இயல்பை விட குறையக்கூடும்.

நாளை மற்றும் நாளை மறுநாள் அதிகபட்ச வெப்பநிலை, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இயல்பை ஒட்டி இருக்கக்கூடும். மே 24 மற்றும் 25ல் அதிகபட்ச வெப்பநிலை, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பாகவும், இயல்பை விட அதிகமாகவும் இருக்கக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மீனவர்களுக்கு எச்சரிக்கை இல்லை.

இதையும் படிங்க:நெல்லை தீபக் ராஜா பசுபதிபாண்டியன் ஆதரவாளரா? பழிக்குப்பழியாக கொலையா? - திடுக்கிடும் பின்னணி - Nellai Youth Murder Case

ABOUT THE AUTHOR

...view details