சென்னை: தமிழகத்தில் ஒருசில இடங்களில் மழை பெய்துள்ளது. புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (செ.மீ):நாலுமுக்கு (திருநெல்வேலி), சோலையார் (கோயம்புத்தூர்) தலா 11 செ.மீ, வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்) தலா 9 செ.மீ, காக்காச்சி (திருநெல்வேலி) தலா 7 செ.மீ, சின்னக்கல்லார் (கோயம்புத்தூர்) 5 செ.மீ, கோழிப்போர்விளை (கன்னியாகுமரி) தலா 4 செமீ, ஜம்புகுட்டப்பட்டி (கிருஷ்ணகிரி) தலா 3 செ.மீ, திருவிடைமருதூர் (தஞ்சாவூர்) தலா 2 செ.மீ, திருமங்கலம் (மதுரை) தலா 1 செ.மீ மழை பதிவாகி உள்ளது.
அதிகபட்ச வெப்பநிலை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக இயல்பை விட சற்று குறைவாகவும், இயல்பை ஒட்டியும் இருந்தது. அதிகபட்ச வெப்பநிலை ஈரோட்டில் 36.0 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.
தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 32 டிகிரி – 36 டிகிரி செல்சியஸ், வடதமிழக கடலோரப்பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 33 டிகிரி – 35 டிகிரி செல்சியஸ், தென்தமிழக கடலோரப்பகுதிகளில் 30 டிகிரி – 34 டிகிரி செல்சியஸ் மற்றும் மலைப் பகுதிகளில் 21 டிகிரி – 25 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.
சென்னை மீனம்பாக்கத்தில் 34.8 டிகிரி செல்சியஸ் (-3.2 டிகிரி செல்சியஸ்) மற்றும் நுங்கம்பாக்கத்தில் 34.0 டிகிரி செல்சியஸ் (-3.5 டிகிரி செல்சியஸ்) பதிவாகியுள்ளது.
அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை:தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
ஜூன்.9: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள், நீலகிரி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
ஜூன்.10 : தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
ஜூன்.11 முதல் ஜூன்.15 வரை : தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அடுத்த ஐந்து தினங்களுக்கான அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:
ஜூன்.9 முதல் ஜூன்.13 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில், அதிகபட்ச வெப்ப நிலை 2 டிகிரி – 3 டிகிரி செல்சியஸ் படிப்படியாக உயரக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி - 37 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி -28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.