சென்னை:தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் அதிகபட்சமாக வெப்பநிலை அடுத்த 5 தினங்களில் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக் கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தைப் பொறுத்தவரை, தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவி உள்ளது. குறிப்பாக, சேலத்தில் 38.7 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகி உள்ளது.
சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில், கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது. கடந்த 24 மணி நேரத்தில் மழை எங்கும் பெய்யவில்லை. அதிகபட்சமாக, சேலத்தில் 38.7 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகி உள்ளது.
திண்டுக்கல், மதுரை, திருநெல்வேலி, நீலகிரி மாவட்டங்களில் 2 டிகிரி செல்சியஸ் முதல் 4 டிகிரி செல்சியஸ் வரையில் அதிகரித்து உள்ளது. அதிகபட்சமாக, கரூர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் 1.6 டிகிரி செல்சியஸ் முதல் 3 டிகிரி செல்சியஸ் வரையில் இயல்பை விட அதிகமாக பதிவாகி உள்ளது. நாமக்கல்லில் குறைந்தபட்சமாக 17 டிகிரி செல்சியஸ் பதிவாகி உள்ளது.