தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னை ஈசிஆர் சம்பவம்: தலைமை நீதிபதிக்கு வழக்கறிஞர் கடிதம்! - CHENNAI ECR INCIDENT

சென்னை, கிழக்குக் கடற்கரை சாலையில் காரில் பெண்கள் துரத்தப்பட்ட சம்பவத்தில், பாதிக்கப்பட்ட பெண்களின் விவரங்கள் வெளியிடப்பட்ட விவகாரம் தொடர்பாக தாமாக முன்வந்து விசாரிக்க கோரி, வழக்கறிஞர் ஒருவர் தலைமை நீதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

சென்னை உயர்நீதிமன்றம், தலைமை நீதிபதி  கே.ஆர்.ஶ்ரீராம் (கோப்புப்படம்
சென்னை உயர்நீதிமன்றம், தலைமை நீதிபதி கே.ஆர்.ஶ்ரீராம் (கோப்புப்படம்) (ETV Bharat Tamilnadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 30, 2025, 7:46 PM IST

சென்னை:சென்னை, கிழக்குக் கடற்கரை சாலையில் (ஈ.சி.ஆர்.) நள்ளிரவில் திமுக கொடி கட்டிய காரில் பெண்கள் துரத்தப்பட்ட சம்பவத்தில், பாதிக்கப்பட்ட பெண்களின் விவரங்களை வெளியிட்ட விவகாரம் தொடர்பாக தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுக்க கோரி, அதிமுக பெண் வழக்கறிஞர். சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ஶ்ரீராமுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

அதிமுக பெண் வழக்கறிஞர் ரேணுகா தேவி எழுதிய கடிதத்தில், 'ஜனவரி 25 ஆம் தேதி சென்னை ஈசிஆர் சாலையில் கானத்தூர் அருகே முட்டுக்காடு பகுதியில் இரவு நேரத்தில் சென்ற பெண்களை இளைஞர்கள் சிலர் மற்றொரு காரில் துரத்திச் சென்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியது.

சமூக வலைதளத்தில் இந்த வீடியோ பரவியதால் தான் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளதாக தெரிகிறது. இந்த விவகாரம் தொடர்பாக ஜனவரி 29ம் தேதி தாம்பரம் காவல் ஆணையர் வெளியிட்ட பத்திரிக்கை செய்திக்குறிப்பில் பாதிக்கப்பட்ட பெண்னின் பெயர், காரின் எண் போன்றவை வெளியிடபட்டுள்ளது.

விசாரணை நடைபெற்று கொண்டிருக்கும் நேரத்தில் இந்த விவரங்கள் வெளியாக அவசியம் இல்லை எனவும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதாகவும் அவர் தமது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

எனவே, பெண்களின் விவரங்களை வெளியிட்டது தொடர்பாகவும், அவர்களின் அடையாளங்களை வெளியிட்ட அதிகாரி மீதும் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுக்க வேண்டும்' எனவும் அதிமுக பெxண் வழக்கறிஞர் தலைமை நீதிபதிக்கு அனுப்பியுள்ள டிதத்தில் தெரிவிக்கபட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details