மதுரை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து இயக்கப்படும் வரும் சென்னை - போடி அதிவிரைவு ரயில் இன்று காலை மதுரை சந்திப்பு வந்தடைந்த பிறகு தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரலில் இருந்து போடிநாயக்கனூருக்கு விரைவு ரயில் (20601) ஒன்று இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் சென்னையிலிருந்து திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் புறப்பட்டு மறுநாட்களில் போடிநாயக்கனூர் சென்று சேரும். இந்நிலையில், இன்று இந்த ரயில் மதுரை ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டபோது தடம் புரண்டது.
இந்நிலையில் விபத்து குறித்து மதுரை ரயில்வே நிர்வாகம் அளித்துள்ள விளக்கத்தில், புதன்கிழமை (அக். 30) இரவு சென்னையில் மின்சார இன்ஜினுடன் புறப்பட்ட சென்னை - போடி ரயில், வியாழக்கிழமை (அக். 31) காலை 7.10 மணிக்கு மதுரை வந்து சேர்ந்தது. போடி செல்வதற்காக இந்த ரயிலில் மின்சார இன்ஜின் கழற்றப்பட்டு டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டது.