தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

துபாயில் இருந்து சென்னைக்கு தங்கம் கடத்திய குருவி கைது.. சிக்கியது எப்படி?

துபாயில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்திக் கொண்டு வரப்பட்ட ரூ.1.4 கோடி மதிப்புடைய 2 கிலோ தங்க பசையை சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் கைப்பற்றி கடத்தல்காரர்களை கைது செய்துள்ளனர்.

சென்னை விமான நிலையம் கோப்புப் படம்
சென்னை விமான நிலையம் கோப்புப் படம் (Credits- ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : 5 hours ago

சென்னை:துபாயில் இருந்து சென்னைக்கு விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சுங்க அதிகாரிகள் சென்னை சர்வதேச விமான நிலைய வருகை பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை துபாயிலிருந்து சென்னை தனியார் பயணிகள் விமானம் ஒன்று வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்க அதிகாரிகள் கண்காணித்துக் கொண்டு இருந்தனர். குறிப்பாக அந்த விமானத்தில் வந்து விட்டு மற்றொரு விமானத்தில் செல்லும் டிரான்சிட் பயணிகளை கவனமாக கண்காணித்தனர்.

அதில் துபாயில் இருந்து வந்து, மீண்டும் சிங்கப்பூருக்கு மற்றொரு விமானத்தில் செல்ல இருந்த இலங்கையைச் சேர்ந்த சுமார் 35 வயது ஆண் பயணிகள் இருவர் மீது சுங்க அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அதிகாரிகள் அவர்களை ரகசியமாக கண்காணித்து வந்தனர்.

அப்போது அந்த இலங்கை பயணிகள் விமானத்திலிருந்து இறங்கி வந்து டிரான்சிட் பயணிகள் இருக்கும் அறைக்கு வந்து அமர்ந்தனர். அதன் பிறகு இரண்டு பயணிகளுள் ஒருவர் டிரான்சிட் பயணிகளுக்கான கழிவறைக்கு சென்று விட்டு நீண்ட நேரம் கழித்து வெளியில் வந்தார். அப்போது சுங்க அதிகாரிகள் அவர்களை ரகசியமாக கண்காணித்த கொண்டிருந்ததால் அதே கழிவறைக்குள் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

இதையும் படிங்க:"இன்றும் மழை தொடர்ந்தால் நாங்கள் அவ்வளவு தான்" - குமுறும் மதுரை மக்கள்!

அப்போது அந்த கழிவறையின் தண்ணீர் தொட்டிக்குள் ஒரு பிளாஸ்டிக் பேப்பரில் கட்டப்பட்ட பார்சல் ஒன்று மறைத்து வைக்கப்பட்டிருந்தது. சுங்க அதிகாரிகள் அதை எடுத்துப் பிரித்துப் பார்த்த போது பசை வடிவிலான தங்கம் இருந்ததை கண்டுபிடித்தனர். அதில் 2 கிலோ தங்கம் இருந்தது. அதன் சர்வதேச மதிப்பு சுமார் 1.4 கோடி இருக்கலாம் என கூறப்படுகிறது.

இதையடுத்து அந்த தங்கத்தை பறிமுதல் செய்த சுங்க அதிகாரிகள் டிரான்சிட் பயணிகள் அறையில் இருந்த இரண்டு பயணிகளையும் சுங்க அலுவலகத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் இலங்கை பயணிகள் இருவரும் தான் தங்கத்தை கடத்தி வந்ததை ஒப்பு கொண்டனர்.

மேலும், தாங்கள் கூலிக்காகவே இந்த வேலையை செய்வதாகவும் அவர்கள் கூறினர். இதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் இலங்கை பயணிகள் இருவரையும் கைது செய்தனர். அதோடு கழிவறை தண்ணீர் தொட்டிக்குள் மறைத்து வைத்திருந்த தங்கப் பசை பார்சலை வெளியில் எடுத்து செல்லவிருந்த நபர் யார்? என்பது குறித்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits- ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details