சென்னை:ஃபெஞ்சல் புயல் நெருங்கி வரும் நிலையில் சென்னை விமான நிலையத்தில் விமானங்களின் இயக்கம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இண்டிகோ நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், அந்நிறுவனத்தின் சென்னையிலிருந்து இயங்கும் அனைத்து சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விமானங்கள் ரத்து செய்யப்படுவதற்கும் வாய்ப்புள்ளதாக அந்நிறுவனம் கூறியுள்ளது.
பயணிகள் தங்கள் விமானங்களின் நிலை குறித்து இணையதளத்தில் சரிபார்த்துக் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். காலை 9.30 மணி முதல் மறு உத்தரவு வரும் வரை அனைத்து விமான சேவைகளும் நிறுத்தப்படுவதாக இண்டிகோ நிறுவனம் அறிவித்துள்ளது.