சென்னை:திருவொற்றியூர் பகுதியில் உள்ள அம்சா தோட்டம் இரண்டாவது தெருவை சேர்ந்த மதுமதி என்பவர் நேற்று, அவரது வீட்டில் அருகில் உள்ள உறவினருக்கு உணவு கொடுப்பதற்காக கொண்டு சென்றுக் கொண்டு இருந்தார்.
அப்போது ஆக்ரோஷமாக வந்த எருமை மாடு ஒன்று சாலையில் நடந்து சென்றுக் கொண்டு இருந்த மதுமதிவை மூட்டி தூக்கி தரதரவென இழுத்துச் சென்றது. இதனைப் பார்த்த அந்த பகுதியில் துணிகளை இஸ்திரி போடும் கடை வைத்திருக்கும் சந்திரசேகர் என்பவர் மதுமதியை காப்பாற்ற சென்றபோது அவரையும் மாடு தாக்கியுள்ளது.
மேலும் இதனை தடுக்க வந்த பலரையும் மாடு தாக்கியதாகத் தெரிகிறது. இதனையடுத்து எருமை மாடு முட்டி படுகாயம் அடைந்த மதுமதியை மீட்ட அக்கம் பக்கத்தினர் அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்று சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மதுமதிக்கு பரிசோதனை செய்ததில் கால் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும், ஆழமாக உள்ளதால் 20 தையல் போடப்பட்டுள்ளதாகவும் தலையிலும் காயம் உள்ளதால் தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அங்குள்ள தனியார் மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.