தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மத்திய அரசின் திட்டங்களை தலைகீழாக நின்று தடுக்கும் தமிழக அரசு - அண்ணாமலை குற்றச்சாட்டு..! - Mayiladuthurai Bjp

BJP TN State President K.Annamalai: மத்திய அரசின் திட்டங்களை மக்களுக்குச் சென்றடைய விடாமல் தமிழக அரசு தலைகீழாக நின்று தடுப்பதாகவும், 6 லட்சம் தமிழக விவசாயிகளின் பி.எம் கிஸான் சம்மான் (PM-KISAN) கணக்குகள் அழிக்கப்பட்டுள்ளதாகவும் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

: மத்திய அரசின் திட்டங்களை மக்களுக்கு சென்றடைய விடாமல் தமிழக
அண்ணாமலை

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 24, 2024, 3:43 PM IST

மயிலாடுதுறை:பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மயிலாடுதுறை மாவட்டத்தில் 'என் மண், என் மக்கள்" யாத்திரை மேற்கொண்டுள்ளார். மயிலாடுதுறை மாவட்டத்தின் பூம்புகார் சட்டமன்றத் தொகுதியில் நேற்று (ஜன.23) மக்களைச் சந்தித்த அவர் இன்று (ஜன.24) சீர்காழி சட்டமன்றத் தொகுதியில் யாத்திரை மேற்கொண்டார்.

முன்னதாக, மயிலாடுதுறையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், "பாஜக கூட்டணி அமைத்துத் தேர்தலைச் சந்திக்குமா? என்ற கேள்விக்கு அதற்கான நேரம் வரும் போது பார்க்கலாம் என்றார். தமிழ்நாட்டில் பாஜக சார்பில் மாநில தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, பாஜக தேர்தல் பணியைத் தொடங்கிவிட்டதா? என்ற கேள்விக்கு பாஜக 2014ஆம் ஆண்டு தேர்தல் பணிக்கான நேரம் தொடங்கிவிட்டது.

அதிமுகவுடன் கூட்டணி அமைய வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு, நாங்கள் எந்த பாதையில் செல்ல வேண்டும் என்பதில் தெளிவாக உள்ளோம். நேரம் வரும் போது எல்லாவற்றையும் சொல்கிறோம் என்றார். திமுக ஊழல் பட்டியலை வெளியிட்டது போன்று, அதிமுகவுக்கு ஏதேனும் பட்டியல் உள்ளதா என்ற கேள்விக்கு, அண்ணாமலை மட்டும் ஊழல் பட்டியலை வெளியிட்டுக் கொண்டிருக்கிறேன். பத்திரிகையாளர்களும் சேர்ந்தால் இருவரும் சேர்ந்து பட்டியலை வெளியிடலாம் என்றார்.

6 லட்சம் விவசாயிகளின் கணக்குகள் அழிப்பு; மத்திய அரசின் திட்டங்களைத் தடுக்கும் அரசு?:பிரதமரின் வீடு கட்டும் திட்டம் கடந்த ஒரு வருடமாகச் செயல்படாமல் உள்ளது குறித்த கேள்விக்கு, பிரதமரின் வீடு கட்டும் திட்டம், பி.எம் கிஷான் சம்மான் திட்டம் போன்ற திட்டங்களுக்குத் தமிழக அரசு முட்டுக்கட்டை போடுகிறது என்றார். பி.எம். கிஷான் திட்டத்தில் 6 லட்சம் விவசாயிகளின் கணக்குகள் டெலிட் செய்யப்பட்டுள்ளன. இதுபோன்ற மத்திய அரசின் திட்டங்கள் மாநில அரசு வாயிலாகச் செயல்படுத்தப்படும் நிலையில், இத்திட்டங்களை மாநில அரசு தலைகீழாக நின்று தடுக்கிறது' என்று குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும் பேசிய அவர், '100 நாள் வேலைத் திட்டத்தில் தற்போது எந்த பிரச்சனையும் இல்லை. தீபாவளி பண்டிகையின் போது அவை சரிசெய்யப்பட்டுள்ளன. பங்குச்சந்தையில் இந்தியா அபரிமிதமான வளர்ச்சியைக் கொண்டுள்ளது. பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தில் தாசில்தார் தாமதம் காரணமாக விடுபாடு ஏற்பட்டு இருக்கலாம்' என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:பாரத் நியாய யாத்திரை: அசாமில் ராகுல் காந்தி மீது வழக்குப்பதிவு!

ABOUT THE AUTHOR

...view details