தமிழ்நாடு

tamil nadu

பொன்முடியின் அமைச்சர் பதவியை நீக்குக.. போலி பேராசிரியர்கள் விவகாரத்தில் எச்.ராஜா தாக்கு! - H Raja about fake professors issue

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 4, 2024, 8:13 AM IST

H Raja: தமிழக கல்லூரிகளில் பேராசிரியர்கள் போலி நியமனத்துக்கு காரணமான அமைச்சர் பொன்முடியை பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்றும், தமிழகத்தில் பொறுப்பற்ற முறையில் அரசை நடத்தும் இந்த ஆட்சியை 2026ஆம் ஆண்டு தூக்கி எறிய வேண்டும் என்றும் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா கூறியுள்ளார்.

எச். ராஜா
எச். ராஜா (Credits - ETV Bharat Tamil Nadu)

தஞ்சாவூர்:மத்திய அரசின் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் தஞ்சாவூரில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா, முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் கொள்ளிடம் ஆற்றில் செல்கிறது. கடலில் கலக்கும் இந்த தண்ணீரை தேக்கி வைக்க எந்த நடவடிக்கையையும் திராவிட மாடல் அரசு செய்யவில்லை.

எச். ராஜா செய்தியாளர் சந்திப்பு (Credits - ETV Bharat Tamil Nadu)

தமிழக மக்களிடம் பொய்களை பரப்புகின்ற திமுக ஆட்சி தொடர்ந்தால், தமிழகம் மோசமான நிலைக்குச் சென்று விடும். எனவே, திராவிட மாடல் திமுக அரசை அரசியலில் இருந்து வேருடன் அகற்ற வேண்டும். திமுக எம்பிக்களான தயாநிதிமாறன், கனிமொழி ஆகியோர் நாடாளுமன்றத்தில் பேசும் போது, தமிழக மக்கள் வரி செலுத்த வேண்டாம் என நாங்கள் கூறினால் என்னாகும் என பேசியுள்ளார்கள்.

நீங்கள் திமுக செயற்குழுவைக் கூட்டி சொல்ல வேண்டியது தானே, அப்படிச் சொன்னால் திமுகவும், தமிழக அரசும் இருக்காது. மேலும் தமிழகத்தில், திராவிட மாடல் ஆட்சியில் அமைச்சர் பொன்முடி நிர்வாகத்தில் 292 கல்லூரிகளில் போலி பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் 10 கல்லூரிகளில் பேராசிரியராக உள்ளார். ஊழல் நிறைந்த ஒருவர் உயர் கல்வித்துறை அமைச்சராக இருந்தால் இது தான் நடக்கும்.

இதனால் பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கம் செய்ய வேண்டும். தமிழகத்தில் பொறுப்பற்ற முறையில் அரசை நடத்தும் இந்த ஆட்சியை 2026ஆம் ஆண்டு தூக்கி எறிய வேண்டும். ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு சம்பளம் போட முடியாத நிலையில் இந்த அரசு உள்ளது. இதை விட்டுவிட்டு மத்திய அரசை குறை சொல்வதை நிறுத்த வேண்டும்” என்று கூறினார். இப்பேட்டியின் போது மாவட்ட தலைவர் ஜெய்சதிஷ், பொறியாளர் சிவப்பிரகாசம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க:“இலங்கை அணி தோற்றதால் இந்திய மீனவர்கள் சிறைபிடிப்பு” - ஜெயக்குமார் பேச்சு! - Jayakumar about Fishermen arrest

ABOUT THE AUTHOR

...view details