சென்னை:மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களில் நடந்து முடிந்த சட்டப் பேரவைத் தேர்தலின் வாக்கு எண்ணும் பணி காலை 8 மணி முதல் நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக கூட்டணியும், ஜார்க்கண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் கூட்டணியும் முன்னிலை வகித்து வருகின்றன.
இந்நிலையில் இதுகுறித்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ் இளங்கோவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,"ஜார்கண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்று உள்ளது. மராட்டியத்தில் பாஜக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.
டி.கே.எஸ் இளங்கோவன் பேட்டி (Credit - ETV Bharat Tamil Nadu) இதையும் படிங்க:"டார்ச் வெளிச்சத்தில் நடக்கும் இறுதி சடங்குகள்.. 1 கோடி ரூபாய் மதுரை மயானத்தில் மின் விளக்கு இல்லாத அவலம்!"
மராட்டியத்தில் கூட்டணி புரிதல் சரியாக இல்லை என நான் நினைக்கின்றேன். இதனால் பாஜகவுக்கு சாதகமாக வாய்ப்பு சூழல் அமைந்துள்ளது.
ஜார்கண்டை பொறுத்தவரையில் மலைவாழ் மக்களை மணிப்பூரில் எவ்வாறு நடத்துகிறார்கள் என்பதை பார்த்தபிறகும் பாஜகவை ஏற்றுக்கொள்ள எந்த மலைவாழ் மக்களுக்கும் உடன்பாடு இருக்காது என்ற வகையில் ஜார்கண்டில் பாஜகவை தோற்கடித்துள்ளார்கள்.
சிவசேனா போன்ற பெரிய கட்சிகள் எல்லாம் உடைக்கப்பட்டு அதன் மூலம் புதிய கூட்டணிகள் உருவாகி இந்த தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்கள். மராட்டியத்தில் பாஜக சாதனைக்கான வெற்றி என நான் கருத மாட்டேன். மராட்டியம் ஒரு வளர்ந்த மாநிலம் என்ற வகையில் இந்த 5 ஆண்டுகளில் அவர்கள் எதையும் சாதிக்கவில்லை. பாஜக அரசியல் காரணங்களைக் கொண்டு வெற்றி பெற்றதாகவே நான் கருதுகிறேன்" என தெரிவித்தார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat) ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறியஇங்கே க்ளிக் செய்யவும்