அரியலூர்: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு, கடந்த மார்ச் 26ஆம் தேதி முதல் ஏப்ரல் 8ஆம் தேதி வரை 4,107 மையங்களில் மொத்தம் 9 லட்சத்து 10 ஆயிரத்து 24 பேர் தேர்வெழுதினர். இது தவிர, தனித்தேர்வர்களாக 28 ஆயிரத்து 827 பேரும், சிறைவாசிகள் 235 பேரும், இந்த பொதுத்தேர்வை (Tamil Nadu 10th Result 2024) எழுதினர். இந்நிலையில், 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியது. இதில், மொத்தம் 91.55 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இதனிடையே, அரியலூர் மாவட்டத்தில் நடந்த இந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 5035 மாணவர்கள் 4737 மாணவிகள் என மொத்தம் 9772 மாணாக்கர்கள் தேர்வு எழுதினர். இதில், 97.31% மாணாக்கர்கள் தேர்ச்சி பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை புரிந்துள்ளனர்.
இதில், 96.41% மாணவர்களும் 98.35% மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது அரியலூர் மாவட்ட கல்வியாளர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும், இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அரியலூர் மாவட்ட ஆட்சியர் ஆனி மேரி ஸ்வர்ணா, 'பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளது மகிழ்ச்சி' அளிப்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும் பேசிய அவர், 'இதற்கு முக்கிய காரணமாக, மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக அரசால் வழங்கப்பட்ட வழிகாட்டல் கையேடு முக்கிய காரணமாகும். இந்த கையேட்டில் தேர்விற்கு வரக்கூடிய முக்கிய வினாக்கள் அதற்கான விடைகள் இருந்ததோடு, அதனை எவ்வாறு மாணவர்கள் கற்க வேண்டும் என்பது குறித்தும் பல்வேறு விழிப்புணர்வு வழிகாட்டல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.