தூத்துக்குடி:சில நாட்களாக இணையத்தின் ஹாட் டாப்பிக்காக வலம் வந்த தகவல் ஏ.ஆர்.ரகுமான் மற்றும் அவரது மனைவியின் பிரிவு குறித்து சமூக வலைதள பதிவுகள். நவம்பர் 19ஆம் தேதி பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானை பிரிவதாக அவரது மனைவி சாய்ரா பானு தனது வளைதளப் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.
இதையடுத்து, ஏ.ஆர்.ரகுமானிடம் பணிபுரிந்த இசைக் கலைஞர் மோகினி டே தனது கணவர் மார்ஷ் ஹார்ட்சச்சும்-ஐ பிரிவதாக அறிவித்திருந்தார். இந்த அடுத்தடுத்த பதிவுகள் இணையவாசிகளுக்கு பேசுபொருளாக மாறியது. இந்நிலையில், ஏ.ஆர்.ரகுமான் தன் மீது அவதூறு பரப்பும் யூடியூப் சேனல்கள் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பி இருந்தார். இதைத் தொடர்ந்து ஏ.ஆர்.ரகுமானிடம் பணிபுரிந்த இசைக் கலைஞர் மோகினி டே, “ஏ.ஆர்.ரகுமான் எனது தந்தை போன்றவர்” என வீடியோ வெளியிட்ட நிலையில், அந்த வீடியோவும் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
இந்நிலையில், இதுகுறித்து ஏ.ஆர்.ரகுமானின் குடும்ப நண்பரும், சென்னை சேப்பாக்கம் தொகுதி அதிமுக கூட்டணி எம்.எல்.ஏ வேட்பாளரும், பாமக துணைத் தலைவருமான கசாலி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.
அப்போது அவர், “நானும் ரகுமானும் சிறு வயதில் இருந்து நெருங்கிய நண்பர்கள். எனவே நான் ரகுமானின் தனிமனித ஒழுக்கம் குறித்து நன்றாக அறிந்தவன். தற்போது வெளியான ரகுமான் மற்றும் அவரது மனைவியின் பிரிவு குறித்த செய்தி இணையத்தில் பல்வேறு விதமாக திரிக்கப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க:கிணற்றில் தவறிய ஒருவர்; அதை பார்க்கச் சென்ற பெண்ணும் தவறிய சோகம்!