சென்னை:தொழில் முதலீடுகளை ஈர்க்க 17 நாட்கள் அரசுமுறை பயணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா சென்றுள்ளார். சான் பிரான்சிஸ்கோ நகரில் நேற்று(வியாழக்கிழமை) முதல் நாள் முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. அதில், முதலமைச்சர் முன்னிலை ஆறு முன்னணி நிறுவனங்கள் தமிழகத்தில் தங்களது நிறுவனங்களை தொடங்க புதிய ஒப்பந்தகளில் கையெழுத்திட்டுள்ளன.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், "முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நேற்று (29.8.2024) அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில், உலகின் முன்னணி தொழில் நிறுவனங்களான நோக்கியா, பேபால், ஈல்ட்டு இன்ஜினியரிங் சிஸ்டம்ஸ், மைக்ரோசிப் டெக்னாலஜி, இன்பிங்ஸ் ஹெல்த்கேர் மற்றும் அப்ளைடு மெட்டீரியல்ஸ் ஆகிய 6 நிறுவனங்களுடன் 900 கோடி ரூபாய் முதலீட்டில் சென்னை, கோவை மற்றும் மதுரையில் 4,100 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன" எனக் கூறப்பட்டுள்ளது
கோவையில், ரூ.150 கோடி முதலீட்டில் செமி கண்டக்டர் உற்பத்தி தொழிற்சாலையை அமைக்க ஈல்ட்டு இன்ஜினியரிங் சிஸ்டம்ஸ்(Yield Engineering Systems) நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் மூலம் 300 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.