தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

எஃப்.ஐ.ஆர் விவகாரத்தில் செய்தியாளர்களிடம் காவல்துறை எல்லை மீறினால் உச்ச நீதிமன்றத்தை அணுகலாம் - ஐகோர்ட்! - FIR LEAK INVESTIGATION

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கி்ன் எஃப்.ஐ.ஆர் கசிந்த விவகாரத்தில் விசாரணை என்ற பெயரில் காவல்துறை எல்லை மீறினால் உச்ச நீதிமன்றத்தை அணுகலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.

அண்ணா பல்கலை., சென்னை ஐகோர்ட் (கோப்புப்படம்)
அண்ணா பல்கலை., சென்னை ஐகோர்ட் (கோப்புப்படம்) (credit - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 29, 2025, 5:20 PM IST

சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை தொடர்பான எஃப்.ஐ.ஆர் வெளியான விவகாரத்தில், விசாரணை என்ற பெயரில் செய்தியாளர்கள் துன்புறுத்தப்படுவதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது.

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் முதல் தகவல் அறிக்கை வெளியானது குறித்து சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த வகையில், முதல் தகவல் அறிக்கை தயார் செய்த காவல் நிலைய எழுத்தர் உட்பட 14 பேர் விசாரணை வளையத்துக்குள் உள்ளனர். இந்த நிலையில், எஃப்.ஐ.ஆர் வெளியான விவகாரத்தில், விசாரணை என்ற பெயரில் செய்தியாளர்கள் துன்புறுத்தப்படுவதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் சார்பில் வழக்கறிஞர் சூரிய பிரகாசம் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், ஜோதிராமன் அமர்வு முன்பு முறையீடு செய்தார்.

அப்போது அவர், விசாரணை என்ற பெயரில் செய்தியாளர்களின் செல்போன்களை பறிமுதல் செய்வதாகவும், ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவில் மீடியா குறித்து எந்த உத்தரவும் இல்லை என்றும் சுட்டிக்காட்டினார். மேலும், செய்தியாளர்களிடம் தனிப்பட்ட விவரங்களை கேட்டு துன்புறுத்துவதாகவும் இது குறித்து தாங்கள் (நீதிபதிகள்) தலையிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இதையும் படிங்க:"ஜாமீன் வழங்கும் போது கடுமையான நிபந்தனைகள் வேண்டாம்" - உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்!

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாக தெரிவித்தனர். அதற்கு பதில் அளித்த வழக்கறிஞர் சூரிய பிரகாசம், ''காவல்துறை ஆணையர் குறித்த கருத்துகள் தொடர்பான மேல்முறையீடு தான் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதது. பத்திரிகையாளர் சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும்'' என்று தெரிவித்தார்.

அதற்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவில் விசாரணை குறித்து தெளிவாக குறிப்பிட்டதாகவும் அதன் அடிப்படையில் மட்டுமே விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று தெரிவித்தார். மேலும், முதல் தகவல் அறிக்கை பொதுத் தளத்துக்கு வந்து பிறகு அது யார் வேண்டுமானாலும் பார்க்கலாம் என்றும் காவல்துறை எல்லை மீறினால் உச்ச நீதிமன்றத்தை அணுகுமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.

ABOUT THE AUTHOR

...view details