தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

எடப்பாடி பழனிசாமிக்கு ஏ.வி.ராஜு சார்பில் வக்கீல் நோட்டீஸ்! - ஏ வி ராஜூ த்ரிஷா விவகாரம்

AV Raju legal notice to EPS :அதிமுகவில் இருந்து தன்னை நீக்கிய அறிவிப்பை உடனடியாக திரும்பப் பெற வேண்டுமென அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி.ராஜு சார்பில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

AV Raju legal notice to EPS
எடப்பாடி பழனிசாமிக்கு ஏ.வி. ராஜு வக்கீல் நோட்டீஸ்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 23, 2024, 4:26 PM IST

சென்னை:அதிமுகவின் சட்டதிட்டங்களுக்கு விரோதமாக, அதிமுகவின் ஒழுங்கை குலைக்கும் வகையில் செயல்பட்டதாக கூறி, சேலம் மேற்கு ஒன்றியச் செயலாளர் ஏ.வி.ராஜுவை, அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்குவதாக பிப்ரவரி 17ஆம் தேதி, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

இந்நிலையில், இது தொடர்பாக ராஜு சார்பில் எடப்பாடி பழனிசாமிக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதில், தன்னை நீக்குவதாக வெளியிடப்பட்ட அறிவிப்பில் கட்சி விரோத நடவடிக்கை என்ன என்று விளக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அதிமுக உட்கட்சி விதிப்படி உரிய விளக்கம் கேட்டு நோட்டீஸ் எதுவும் அனுப்பாமல், நேரடியாக நீக்கியது தவறு என்றும் அந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தன்னை கட்சியில் இருந்து நீக்கிய அறிவிப்பை உடனடியாக திரும்பப் பெற வேண்டுமென எனவும், இல்லாவிட்டால் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வக்கீல் நோட்டீஸில் கூறப்பட்டுள்ளது. சமீபத்தில் நடிகை த்ரிஷா குறித்து ஏ.வி.ராஜு பேசியது சர்ச்சையானது. இந்நிலையில், 24 மணி நேரத்திற்குள் ஏ வி ராஜு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என நடிகை த்ரிஷா வக்கீல் நோட்டீஸ் அனுப்பியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:திட்டங்களை படித்துவிட்டு பரப்புரை செய்யுங்கள்.. ஸ்டாலின் அறிவுறுத்தல்!

ABOUT THE AUTHOR

...view details