தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பெண்ணை கேலி செய்ததாக 3 இளைஞர்கள் கைது.. விசிகவினர் காவல் நிலையம் முன்பு மறியல் போராட்டம்! - VCK Protest In Vaniyambadi - VCK PROTEST IN VANIYAMBADI

Ambalur police registered a case against VCK people: வாணியம்பாடி அருகே பெண்ணை கேலி, கிண்டல் செய்ததாக அளித்த புகாரின் பேரில் 3 இளைஞர்கள் கைது செய்ததை கண்டித்து, அம்பலூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு சாலைமறியல் போராட்டத்தில் ஈடுப்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 27 பேர் மீது அம்பலூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Ambalur police registered a case against VCK people
அம்பலூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு விசிகவினர் போராட்டம்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 22, 2024, 4:08 PM IST

திருப்பத்தூர்: கடந்த 19 ஆம் தேதி வாணியம்பாடி அடுத்த ராமநாயக்கன்பேட்டை பகுதியையை சேர்ந்த அரவிந்த், சந்தீப், திவாகர் ஆகிய இளைஞர்கள், அப்பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த அனிதா என்ற பெண்ணின் மீது வாகனத்தில் மோதுவது போல் சென்றதாக கூறப்படுகிறது.

இது குறித்து அப்பெண்ணின் கணவர் மாதேஸ்வரன் மற்றும் அவரது குடும்பத்தினர் இளைஞர்களிடையே வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில், இரு தரப்பினரிடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியதால், ஒருவருக்கொருவர் சரமாரியாகத் தாக்கிக் கொண்டுள்ளனர். இதனையடுத்து, இச்சம்பவம் குறித்து பெண்ணின் தரப்பில் அம்பலூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், சந்தீப், திவாகர், அரவிந்தன் ஆகியோரை நேற்று முன் தினம் (ஏப்.20) கைது செய்தனர். இதனால் ஆத்திரமடைந்த இளைஞர்களின் உறவினர்கள் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர், 3 இளைஞர்கள் பொய்யான புகாரில் வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டதாகவும், இளைஞர்களைத் தாக்கிய மற்றொரு தரப்பினர் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி, நேற்று அம்பலூர் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர், இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த (பொறுப்பு) ஆம்பூர் துணை காவல் கண்காணிப்பாளர் அறிவழகன் தலைமையிலான போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்து, தனியார் திருமண மண்டபத்திற்கு அழைத்துச் சென்றனர்.

இந்நிலையில், பொதுமக்கள் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டது, நடந்த சம்பவத்தை நடக்கவில்லை என பொய்யான தகவலை பரப்பியது உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ், விடுதலை சிறுத்தை கட்சி மண்டல துணை செயலாளர் கோவிந்தன் உட்பட போராட்டத்தில் ஈடுபட்ட 27 பேர் மீது அம்பலூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதையும் படிங்க:ஊரோடும் மதுரையில் தேரோட்ட திருவிழா! பக்தர்கள் வடம் பிடிக்க கோலாகலமாக துவங்கியது.. - Madurai Chithirai Festival

ABOUT THE AUTHOR

...view details