வேலூர்:காட்பாடி காங்கேயநல்லூர் திருமுருக கிருபானந்த வாரியார் அரசினர் மேல்நிலைப்பள்ளி 1990 ஆம் ஆண்டு முன்னாள் மாணவர்கள் முதல் மெகா சந்திப்பு நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நேற்று நடந்தது. 34 ஆண்டுகளுக்கு பிறகு ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொண்ட மாணவர்கள்.
விழாவில் முன்னாள் மாணவர்களான சென்னை உதவி போலீஸ் கமிஷனர் ஆர்.மகேந்திரன், சிங்கப்பூர் மென்பொருள் பொறியாளர் வி. கார்த்திகேயன், மாநகராட்சி சுகாதார அலுவலர் கே. சிவக்குமார், வள்ளலார் நிதி உதவி நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியை ஜி.ஜெயந்தி பூங்கொடி, பிரம்மபுரம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் பி.டி.புகழ்வேந்தன், ஆசிரியை எம்.ரேவதி ஆகியோர் பேசினர்.
குழு சங்கமாக மாறியது: சங்க இணை செயலாளர் எ.வனிதா பேசுகையில்,"1990 ஆம் ஆண்டு என்னுடன் பிளஸ் டூ படித்த மாணவர்களை ஒருங்கிணைக்க வேண்டும் என 2022 செப்டம்பர் மாதம் வாட்ஸ்அப் குழு ஒன்றை நான் ஆரம்பித்தேன். அப்போது அதில் ஐந்து பேரைத்தான் இணைக்க முடிந்தது.
அதன் பிறகு நண்பர்கள் சிலர் முயற்சியால் 50 க்கும் மேற்பட்டோர் குழுவில் இணைந்தனர். குழு சங்கமாக மாறியது. பள்ளியின் தேவையை கேட்டு மாணவர்களுக்காக 500 லிட்டர் கொள்ளளவு கொண்ட ரூ.1.30லட்சம் மதிப்புள்ள குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது. 34 ஆண்டுகள் பிறகு நடைபெற்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பில் நண்பர்களை அனைவரும் ஒருங்கிணைந்து பார்த்து பேசி மகிழ்ந்தது அளவில்லா மகிழ்ச்சியை கொடுத்தது. இது பள்ளியில் மீண்டும் படிக்க வந்ததைப் போன்ற உணர்வை ஏற்படுத்தியது" என்றார்.
வாழ்வில் மறக்க முடியாத நாள்: இதுகுறித்து முன்னாள் மாணவரும், சென்னை உதவி போலீஸ் கமிஷனருமான மகேந்திரன் கூறியதாவது,
"நண்பர்கள் ஒருங்கிணைந்து வாட்ஸப் குழு மூலம் முன்னாள் மாணவர் சங்கம் அமைத்தார்கள். சங்கம் மூலம் நாங்கள் படித்த பள்ளியில் மாணவர்களுக்காக குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் அமைத்துக் கொடுக்கப்பட்டது.