விளாத்திகுளம்: தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் புதூரில் தனியார் திருமண மண்டபத்தில், அதிமுக செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி. உதயக்குமார் மற்றும் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு கட்சியினரிடையே 2026 தேர்தல் குறித்து ஆலோசனைகள் வழங்கி சிறப்புரையாற்றினார்கள்.
செயல்வீரர்கள் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் பேசுகையில், கடந்த சட்டமன்ற தேர்தலில் 43 தொகுதிகளில் 1 லட்சத்து 92 ஆயிரம் வாக்குளை நீங்கள் பெற்றுக் கொடுத்து இருந்தால், திமுக என்ற கட்சி தமிழ்நாட்டில் இல்லாமல் போயிருக்கும்.
2021 சட்டமன்றத் தேர்தல் வியூகங்களை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வகுத்து கொடுத்தார். அதைப் பின்பற்றி 75 சட்டமன்ற உறுப்பினர்கள் வெற்றி பெற்றோம். மற்றவர்களிடம் கேட்டதற்கு உள்குத்து, வெளிக்குத்து என்கிறார்கள். இனி அதிமுகவில் உள்குத்து இருக்கவே கூடாது என்று கட்சியினரிடம் எடுத்துரைத்தார்.
இதையும் படிங்க:தி.மலை கார்த்திகை தீபத் திருவிழா முன்னேற்பாடுகள் தீவிரம்.. உதயநிதி ஸ்டாலின்!
எதிர்க்கட்சியாக இருக்கும் போதெல்லாம் துரைமுருகன் துணைக்கு வர வேண்டும்... கருணாநிதிக்கு துணையாக இருக்க வேண்டும், முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினுக்கு துணையாக இருக்க வேண்டும், உதயநிதி ஸ்டாலினுக்கு துணையாக இருக்க வேண்டும், இன்ப நிதிக்கு துணையாக நிற்க வேண்டும்... அமைச்சர் வெட்கம், மானத்தை விட்டு கெஞ்சி பார்த்தார், என்னுடைய பெயரை பரிந்துரை செய்யுங்கள் என்று ஆனால், ஒன்றும் வேகவில்லை... துணையாக இருப்பதற்கு மட்டும்தான் துரைமுருகன், துணை முதலமைச்சர் என்றால் அது உதயநிதி தான் என்று முன்னேற்றக் கழகத்தின் மாடல் இன்றைக்கு வெளியே வந்திருக்கிறது என விமர்சித்தார்.
மேலும், இன்றைக்கு இருக்கக்கூடிய இதே உற்சாகம், புத்துணர்ச்சி இருந்திருந்தால் 2021-ல் மீண்டும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியைப் பிடித்திருக்கும். திமுக என்கிற கட்சி தமிழகத்திலேயே அழிந்து போயிருக்கும் என்று தெரிவித்தார்.
முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசுகையில், 2026 இல் அதிமுக ஆட்சி அமைப்பது உறுதி. இதே கடந்த கால பருவ மழை காலத்தில் பருவமழையை முறையாக கையாண்டது அதிமுக ஆட்சியில் தான் என்றும் தற்போது பருவமழையை எதிர்கொள்ள திமுக அரசு முறையாக செயல்படவில்லை என்றும் கூறினார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறியஇங்கே க்ளிக் செய்யவும்