தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

“பணம் இருப்பவர்கள் கட்சி ஆரம்பிக்கிறார்கள்" விஜய் குறித்த கேள்விக்கு கும்பிடு போட்ட நடிகர் ராதாரவி! - ACTOR RADHA RAVI ON VIJAY

தவெக குறித்த கேள்விக்கு பதிலளிக்க மறுத்த நடிகர் ராதாரவி, காசு இருப்பவர்கள் கட்சி ஆரம்பித்து அரசியலுக்கு வருகிறார்கள். இதில் நான் கருத்துக் கூற ஒன்றும் இல்லை என்று கூறினார்.

நடிகர் ராதாரவி
நடிகர் ராதாரவி (Credits- ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 21, 2024, 4:47 PM IST

கோயம்புத்தூர்:கோயம்புத்தூர் மாவட்டம் கோவைப்புதூர் பகுதியில் உள்ள தனியார் அரங்கில் கோவை மாவட்ட நடிகர் சங்கத்தின் 10ஆம் ஆண்டு கலை விழா மற்றும் கோவை தமிழ்நாடு நாடகம் மற்றும் நாட்டுப்புற கலைஞர் சங்கத்தின் இரண்டாம் ஆண்டு விருது விழா இன்று (நவம்பர்.21) நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் நடிகர் ராதாரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்நிகழ்வில் சிறப்புரையாற்றிய நடிகர் ராதாரவி இந்த விழாவிற்கு வராதவர்களின் புகைப்படத்தை பேனரில் போடும் போது கோபம் வருகிறது. நாம் இல்லாதவர்களை புகழ்ந்துதான் நாசமாகி விட்டோம்.

நடிகர் ராதாரவி பேட்டி (Credits- ETV Bharat Tamil Nadu)

காந்தியை சுட்டுக் கொன்றது இந்தியன்தான். காந்தி நாட்டிற்கு கெடுதல் எதும் செய்யவில்லை. நாடகக் கலையில் மிகப்பெரிய கஷ்டங்கள் இருக்கிறது. ஆனால் அதையெல்லாம் வெளியில் காட்டிக் கொள்ளாமல் நாடக கலைஞர்கள் அவர்களது திறமைகளை வெளிப்படுத்தி வருகிறார்கள். இது போன்ற நிகழ்ச்சி நடிகர் சங்கத்தில் நடத்துவோமா? என்று தெரியவில்லை.

இதையும் படிங்க:ராமேஸ்வரத்தைப் புரட்டிப் போட்ட கனமழை - மீனவ கிராமங்கள் கடும் பாதிப்பு!

தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய ராதாரவி, “செய்தியாளர் சந்திப்பு என்றாலே பக் என்று பயமாக உள்ளது. இந்த நிகழ்ச்சியை பற்றி மட்டும் கேள்வி கேளுங்கள். நாட்டுப்புற கலைஞர்கள் இல்லையென்றால் கிராமங்களில் நிகழ்ச்சியே நடக்காது.

ஜல்லிக்கட்டு காளையை போன்று தான் நாட்டுப்புற கலைஞர்கள் தெய்வசக்தி வாய்ந்தவர்கள். நானும் ஒரு நாடக கலைஞரின் மகன் தான். நாடகக் கலைஞர்களை செய்தியாளர்கள் பெரிது படுத்துங்கள். நாடக கலைஞர்களுக்கு அரசு தற்போது வழங்கி வரும் உதவித்தொகை ரூ.3,000 உயர்த்தி ரூ.5,000 வழங்கினார் மகிழ்ச்சியடைவேன். நாடகக் கலைஞர்களுக்கு அரசு நன்றாகவே உதவி செய்கிறது” என்றார்.

இதையடுத்து நடிகர் விஜயின் தவெக பற்றிய கேள்விக்கு, “ அவர் கையெடுத்து கும்பிட்ட, அதை பற்றி பேச மறுத்தார். பின் திரைப்பிரபலங்கள் கட்சி ஆரம்பித்து அரசியலில் இறங்குவது குறித்து பேசிய அவர், “ காசு இருப்பவர்கள் கட்சி அரம்பித்து, அரசியலுக்கு வருகிறார்கள். இதில் நான் கருத்துக் கூற ஒன்றும் இல்லை” என்று நடிகர் ராதாரவி கூறினார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits- ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறியஇங்கே க்ளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details