வேலூர்:வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் பாஜக கூட்டணி சார்பில் போட்டியிடும் புதிய நீதி கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் இன்று வேலூரில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தமிழ்நாட்டில் 2014ஆம் ஆண்டிலிருந்து 2023ஆம் ஆண்டு வரை மத்திய அரசு 6 லட்சத்து 23 ஆயிரம் கோடி ரூபாயை வரியாக பெற்றுள்ளது.
ஆனால், மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு ஆறு லட்சத்து 90 ஆயிரம் கோடியாக நிதியினை வழங்கி உள்ளது. சுமார் 73 ஆயிரம் கோடி ரூபாய் தமிழ்நாட்டிற்கு அதிகமாக வழங்கியுள்ளது. தமிழ்நாட்டிற்காக மத்திய அரசு கொண்டு வந்துள்ள பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு, மாநில அரசின் திட்டங்களைப் போல செயல்படுத்தி வருகிறது.
தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணிகளை ஆதரித்து பாரத பிரதமர் நரேந்திர மோடி விரைவில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள தமிழ்நாட்டிற்கு வர உள்ளார். வேலூரிலும் பிரதமர் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்” என்றார். ராமநாதபுரத்தில் ஓ.பன்னீர்செல்வம் பெயரில் ஐந்து பேர் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறதே என செய்தியாளர்கள் கேட்டதற்கு, “ஓபிஎஸ்-க்கு மட்டும் அல்ல, என் பெயரிலும் ஐந்து பேர் வேலூர் நாடாளுமன்றத் தேர்தலில் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.