திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், மூலனூர் அருகே உள்ள முளையாம்பூண்டி பகுதியில் உள்ள வேப்பமரத்தில் 2 நாய்களை கட்டி தொங்கவிடப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்டதாக திருப்பூர் மாவட்ட பிராணிகள் வதை தடுப்புச் சங்கத்தினருக்கு புகார் வந்தது.
மேலும், அந்த பகுதியில் இரண்டு நாய்களை சிலர் கட்டி தொங்கவிட்டு, கொடூரமாக அடித்தேக் கொல்லும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட பிராணிகள் வதை தடுப்புச் சங்க நிர்வாகி நாகராஜ் மூலனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரில், "மூலனூர் அருகே உள்ள முளையாம்பூண்டி, கோவில்மேட்டுப்புதூரில் உள்ள முத்துசாமி கோயில் பகுதியில் வசிக்கும் கிட்டுச்சாமி என்பவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து, அவரது வளர்ப்பு நாயையும், இன்னொரு தெருநாயையும் மரத்தில் கட்டி தொங்கவிட்டும், அடித்தே கொன்றதாகவும் புகாரில் தெரிவித்துள்ளார்.