சீர்காழி:மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா திருவெண்காடு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கணேசன் (59). இவர் திருவெண்காடு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி காவல் ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கு 2 மகள்கள் உள்ளனர்.
இந்த நிலையில், கணேசனின் ஒரு மகளை அதே பகுதியைச் சேர்ந்த கலை வேந்தன் (27) என்பவர் ஒருதலை பட்சமாக காதலித்து வந்துள்ளார். இதற்கு பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்ததால் ஆத்திரமடைந்த கலைவேந்தன் நேற்றிரவு கணேசன் வீட்டிற்கு சென்று தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோல் குண்டை வீசியுள்ளார்.
இதில் பெட்ரோல் குண்டு வெடித்து வாசலில் அமர்ந்திருந்த கணேசன் படுகாயம் அடைந்தார். அதனை அறிந்த அருகில் இருந்தவர்கள் கணேசனை மீட்டு சிகிச்சைக்காக சீர்காழி அரசு மருத்துவமனையில் சேர்த்து உள்ளனர். தொடர்ந்து கலைவேந்தனை அப்பகுதி மக்கள் பிடித்து திருவெண்காடு காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
தொடர்ந்து கலைவேந்தனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க:ஈடிவி பாரத் செய்தி எதிரொலி.. பெருங்களத்தூர் பாலத்தை திறந்து வைத்த அமைச்சர்.. இனி ஜிரோ டிராஃபிக்!