சென்னை:தாம்பரம் ரங்கநாதபுரம் ஆறாவது குறுக்கு தெருவை சேர்ந்தவர் பாபு. குவைத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சந்தியா. இவர்களுக்கு தாரிஸ், கோகுல் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். தாரிஸ் தாம்பரத்தில் உள்ள தனியார் பள்ளியில் பதினொறாம் வகுப்பு படித்து வந்துள்ளார். தீவிர சைவ பிரியரான தாரிஸ் அசைவ உணவுகளை சாப்பிடமாட்டார். இதனால் வீட்டில் அசைவ உணவு சமைக்காமல் இருந்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் கடந்த 17ஆம் தேதி பக்ரீத் பண்டிகையின்போது தாரிசின் தம்பி கோகுல் அருகில் நண்பர்கள் கொடுத்த சிக்கன் பிரியாணியை வீட்டில் வைத்து சாப்பிட்டுள்ளார். அப்போது தாரிஸ் என் அருகில் பிரியாணியை வைத்து சாப்பிடாதே என தம்பியை கண்டித்துள்ளார். இதில் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து நேற்று வீட்டில் தாரிஸ் தனி அறைக்கு சென்று வெளியில் வராமல் இருந்துள்ளார்.
மேலும், இரவில் வெகு நேரமாகியும் வெளியில் வராததால், ஜன்னல் வழியாக உள்ளே பார்த்தபோது தற்கொலை அவர் செய்து கொண்டது தெரிய வந்துள்ளது. உடனடியாக கதவை உடைத்து அவரை மீட்டு, சிகிச்சைக்காக தாம்பரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்து பார்த்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.