கோயம்புத்தூர்:கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டம், கோலிப்பாறை நாலு சென்ட் காலனியைச் சேர்ந்தவர், ரெகு(54). இவர் கேரளாவில் இருந்து கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்துள்ள வால்பாறையில் தங்கி அப்பகுதியில் கட்டிட வேலை செய்து வந்தார்.
எப்போதும் பணியை முடிந்துவிட்டு மாலை நேரத்தில் நடைப்பயிற்சி மேற்கொள்ளுவதை ரெகு வழக்கமாக வைத்துள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில் நேற்று வழக்கம் போல் பணியை முடித்துவிட்டு ஸ்டாண்மோர் கரும்பாலம் பகுதியில் நடைப்பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
அப்போது வால்பாறையில் இருந்து இஞ்சிப்பாறை நோக்கி சென்ற இருசக்கர வாகனம் ஒன்று ரெகு மீது மோதியுள்ளது. இதில் தூக்கிவீசப்பட்ட அவருக்கு உடலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனைப் பார்த்த அங்கிருந்த பொதுமக்கள், அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் வால்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.