தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மதுரை பேருந்து நிலையத்தில் பிரசவம்; உடனடி மருத்துவ உதவி கிடைக்காததால் குழந்தை உயிரிழப்பு! - Newborn Baby death - NEWBORN BABY DEATH

Newborn Baby death: மதுரை எம்.ஜி.ஆர். பேருந்து நிலையத்தில் பிறந்த பச்சிளம் குழந்தைக்கு, உடனடி மருத்துவ உதவி கிடைக்காததால் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது

கோப்புப் படம்
கோப்புப் படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 8, 2024, 11:59 AM IST

மதுரை:திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிரவீணா (வயது 37). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவர் நேற்று மதுரை எம்.ஜி.ஆர். பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளார். நான்காவது நடைமேடையில் வந்து இறங்கிய நிலையில், அப்பெண்ணுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.

இதனைக் கண்ட பொதுமக்கள் உடனடியாக ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்துள்ளனர். பெண்ணுடன் உதவிக்கு யாரும் இல்லாத நிலையில், ஆம்புலன்ஸ் அந்த இடத்திற்கு வருவதற்குள்ளாகவே, அப்பெண்ணிற்கு குழந்தை பிறந்து விட்டது. இந்த நிலையில் பிரசவமான உடன் பச்சிளம் குழந்தைக்கு கிடைக்க வேண்டிய உடனடி மருத்துவ சிகிச்சை கிடைக்காததால் குழந்தை இறந்து போனதாக கூறப்படுகிறது.

பின்னர், பிரவீணா அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். இந்தச் சம்பவம் குறித்து மாட்டுத்தாவணி காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credit - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க:சாதியை காரணங்காட்டி பிரசவம் பார்க்க மறுத்த செவிலியர்.. சுகாதார நிலையம் முன்பு குவிந்த உறவினர்கள்.. - Primary Health Centre Caste Issue

ABOUT THE AUTHOR

...view details