தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஒரே நாளில் 9 விமானங்கள் ரத்து! என்ன காரணம்? - CHENNAI AIRPORT FLIGHT CANCELLATION

சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இன்று ஒரே நாளில் 4 புறப்பாடு விமானங்கள் மற்றும் 5 வருகை விமானங்கள் என 9 விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர்.

சென்னை விமான நிலையம் கோப்புப் படம்
சென்னை விமான நிலையம் - கோப்புப் படம் (Credits- ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 10, 2024, 2:06 PM IST

சென்னை:சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து இன்று காலை 9.40 மணிக்கு பெங்களூரு செல்ல வேண்டிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், மாலை 6.10 மணிக்கு கவுகாத்திக்கு செல்ல வேண்டிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், இரவு 9.10 மணிக்கு டெல்லிக்கு செல்ல வேண்டிய விஸ்தாரா ஏர்லைன்ஸ் விமானம், இரவு 10.40 மணிக்கு கொல்கத்தா செல்ல வேண்டிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், ஆகிய 4 புறப்பாடு விமானங்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன.

வருகை விமானங்கள் ரத்து:அதைபோல் சென்னை உள்நாட்டு விமான நிலையத்துக்கு வருகை விமானங்களான அதிகாலை 1 மணிக்கு புனேயில் இருந்து வரவேண்டிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், காலை 9 மணிக்கு பெங்களூரில் இருந்து வரவேண்டிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், மாலை 5.35 மணிக்கு பெங்களூரில் இருந்து வரவேண்டிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், இரவு 8.20 மணிக்கு டெல்லியில் இருந்து வரவேண்டிய விஸ்தாரா ஏர்லைன்ஸ் விமானம், இரவு 10.05 மணிக்கு கொல்கத்தாவில் இருந்து வரவேண்டிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், ஆகிய 5 வருகை விமானங்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதையும் படிங்க:‘மூஞ்ச பார்த்தாலே தெரிகிறது’ - சமூகத்தை குறிப்பிட்டு இளைஞரை தாக்கிய போலீஸ்!

ரத்தான 9 விமானங்கள்:எனவே சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இன்று 4 புறப்பாடு விமானங்கள், 5 வருகை விமானங்கள் என மொத்தம் 9 பயணிகள் விமானங்கள், திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளன. நிர்வாக காரணங்களால் இந்த விமான சேவைகள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அவதியில் பயணிகள்:இதனால் இந்த விமானங்களில் பயணிக்க முன்பதிவு செய்து இருந்த பயணிகள் விமானங்கள் திடீர் ரத்து காரணமாக பெரும் அவதிக்குள்ளாகினர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits- ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்.

ABOUT THE AUTHOR

...view details