சென்னை:இந்தியாவில் ஆண்டுதோறும் 1.80 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் பக்கவாதத்தினால் புதிதாக பாதிக்கப்படுவதாககவும், 80 சதவீதம் பேருக்கு ரத்த அடைப்புகளினால் பக்கவாதம் ஏற்படுகிறது என அப்போலோ மருத்துவமனையின் மருத்துவர் சீனிவாசன் பரமசிவம் தெரிவித்துள்ளார்.
உலக பக்கவாதம் தினம் (World Stroke Day) அக்டோபர் 29ம் தேதி கொண்டாடப்பட்ட நிலையில் சென்னை அப்போலோ மருத்துவமனை சார்பில் பக்கவாதம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மருத்துவர்கள் தங்களின் அனுபவங்களை பகிர்ந்துக் கொண்டனர்.
பாதிப்பு எண்ணிக்கை?: இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அப்போலோ மருத்துவமனையில் ஒருங்கிணைந்த மையம் அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
2021-ம் ஆண்டில் பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1.25 மில்லியனாக இருந்த நிலையில், 2023ல் சுமார் 1.80 மில்லியனாக அதிகரித்திருக்கிறது.
அப்போலோ மருத்துவமனையில் நரம்பியல் மருத்துவர் சீனிவாசன் பரமசிவம் ஈடிவி பாரத்திற்கு அளித்த சிறப்பு பேட்டியில், "பக்கவாதம் நோய் ரத்தநாளங்களில் ஏற்படும் அடைப்புகளினால் தான் 80 சதவீதம் பேருக்கு ஏற்படுகிறது. பக்கவாத பாதிப்பு இருப்பது தெரியவந்த உடனேயே, சிகிச்சை பெற வேண்டியது மிக மிக அவசியம்.
அறிகுறிகள்:
- உடலில் உணர்வின்மை அல்லது உடலின் ஒரு பக்கத்தில் கல்,கால் பலீனமாக உணர்வது
- திடீரென ஒரு புற கண் பார்வையில் குறைபாடு
- சிரிக்கும் போது, ஒரு புறத்தில் வாய் கோணலாக போவது
- இரு கைகளையும் மேலே தூக்க முடியாமல் இருப்பது
- சரலமாக பேச முடியாமல் போவது
மீண்டு வரும் வாய்ப்பு:பாதிப்பு ஏற்பட்ட முதல் 4 மணி 30 நிமிட நேரத்தை மருத்துவ உலகில் ‘கோல்டன் ஹவர்’ என்று அழைக்கின்றனர். 4 மணி 30 மணிநேரத்திற்குள்ளாக பக்கவாத பாதிப்பிற்கான சிகிச்சையை அளிப்பதன் மூலம் பக்கவாத பாதிப்பான உடல் செயல்பட இயலாத நிலையைக் குறைப்பதிலும், பாதிப்பிலிருந்து மீண்டு வரும் வாய்ப்புகளை அதிகரிப்பதிலும் நல்ல முன்னேற்றம் இருக்கிறது.
தற்காப்பது எப்படி?: பக்கவாதம் வராமல் தடுப்பதற்கு வாழ்க்கை முறையில் மாற்றத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். மன அழுத்தம், ரத்தக் கொதிப்பு போன்ற நோய்கள் இல்லாத வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும்.
பக்கவாதம் நோய் வந்தவர்களின் மூளையில் உள்ள செல்கள் வேகமாக செயலிக்கும் எனவே விரைந்து சிகிச்சை அளிக்க வேண்டும்.