விழுப்புரம்:திண்டிவனம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த ஏழு வயது மற்றும் ஒன்பது வயது சிறுமிகள் தனது பாட்டி பராமரிப்பில் வளர்ந்து வந்தனர். கடந்த 2018-ஆம் ஆண்டு இரு சிறுமிகளுக்கு அதே பகுதியை சேர்ந்த உறவினர்கள் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது.
சிறுமியின் தாயார் 2019-ஆம் ஆண்டு பிரம்மதேசம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், நடத்தப்பட்ட விசாரணையில் தீனதயாளன், அஜித்குமார், பிரபா, பிரசாந்த், ரவிக்குமார், அருண், மகேஷ், ரமேஷ், துரைராஜ், மோகன், செல்வம், கமலக்கண்ணன், முருகன், துரைசாமி, செல்வம், சேகர் ஆகிய 15 நபர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்தது தெரியவந்தது.
இதில் உடல்நிலை பாதிக்கப்பட்ட இரண்டு சிறுமிகள், பள்ளியில் சோர்வாகக் காணப்பட்ட பொழுது பள்ளி ஆசிரியர் சம்பந்தப்பட்ட சிறுமிகளிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது உறவு முறை கொண்ட 15 நபர்கள், இரண்டு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வெளிச்சத்திற்கு வந்தது.